சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை பிப்ரவரி மாதத்தில் மட்டும் ரூ.100 உயர்ந்துள்ளது.

 


பிப்.4ந்தேதி 25 ரூபாயும், பிப்.15ந்தேதி 50 ரூபாயும் உயர்த்தப்பட்ட நிலையில் இன்று மேலும் 25 ரூபாய் அதிகரித்துள்ளது.

பிப்ரவரியில் 3வது முறையாக ரூ.25 விலை உயர்வால் கேஸ் சிலிண்டர் விலை ரூ.785 லிருந்து ரூ.810 ஆக அதிகரித்துள்ளது.

சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.