பொதுவாகவே மனித வாழ்கையில் பல்வேறு விடங்களிலும் கையொப்பம் முக்கிய இடத்தை பிடித்துவிடுகின்றது.
கல்வி தொடர்பாக விடயங்களாக இருந்தாலும் சரி தொழில் தொடர்பான விடயங்களாக இருந்தாலும் சரி, அவ்வளவு ஏன் திருமணம் செய்ய வேண்டும் என்றாலும் கையொப்படம் இன்றியமையாதது.
உண்மையில் ஒருவருடைய பெயர் மற்றும் signature அவர்களின் அடையாளம் என்றால் மிகையாகாது.
தமது முன்னோர்கள் குறிப்பிடுகையில் நமது கையெழுத்தை போல் தான் நமது தலையெழுத்தும் இருக்கும் என்று கூறுவார்கள். இது வெறும் வார்த்தைக்காக சொல்லப்பட்ட விடயம் இல்லை.
ஒருவருமைய கையொப்பத்தை வைத்தே அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களையும் முக்கிய ஆளுமைகளையும் கணித்துவிட முடியும் என ஜோதிட சாஸ்திர நிபுணர்கள் மற்றும் உளவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
அந்த வகையில் எப்படிப்பட்ட கையொப்பம் இடுபவர்கள் எவ்வாறான ஆளுமைப்பண்புகளை கொண்டிருப்பார்கள் என்பது குறித்து இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
பெரிய மற்றும் தடிமனான கையொப்பம்
ஜோதிட மற்றும் உளவியல் நிபுணர்களின் கருத்தின் பிரகாரம் பெரியதாகவும், தடிமனாகவும் கையொப்பம் இடுபவர்கள் தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் எத்தனை தமைகள் வந்தாலும் தங்களின் இலக்கை அடைவதில் முழுமையாக கவனம் செலுத்த கூடிய தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதில் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். இவர்கள் தனிப்பட்ட உறவுகளை பார்க்கிலும் தொழில் விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அடிக்கோடிட்ட கையொப்பம்
கையொப்பமிட்டு அதன் கீழே அடிக்கோடிடும் பழக்கத்தை கொண்டவர்கள் வலுவான சுய உணர்வை கொண்டிருப்பார்கள். அதன் பிரதிபலிப்பே அடிக்கோடிட்ட கையொப்பம்.
இவர்கள் எப்போதும் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியானவர்களாக இருப்பார்கள்.
மற்றவர்களை விடவும் இவர்கள் வித்தியாசமாகவர்களாகவும் அதிக திறமைசாலிகளாகவும் இருப்பார்கள்.
அவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் வாழ்க்கை மீதான நேர்மறை எண்ணங்கள் அதிகமான இருக்கும்.
தெளிவற்ற கையொப்பம்
கையொப்பம் தெளிவற்ற வகையில் அல்லது சுருக்கமாக இருந்தால், அது அவர்களின் அவசரமான குணத்தின் பிரதிபலிப்பாக பார்க்கப்படுகின்றது.
இவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் தங்களின் திறமை மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
தெளிவற்ற கையொப்பம் இடுபவர்கள் மர்மம் நிறைந்தவர்களாகவும் உணர்வுகளை எளிதில் வெளிப்படுத்தாதவர்களாகவும் இருப்பார்கள்.
சிறிய கையொப்பம்
மிகவும் சிறியதாக கையொப்பம் இடுபவர்கள் தீவிர சிந்தனையாளர்களாக இருப்பார்கள்.இவர்களுக்கு கூச்ச சுபாவம் சற்று அதிகமாக இருக்கும்.
இவர்கள் அடக்கமாகவும் அமைதியாகவும் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்களின் உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.