நமது உடல் நமது உயிரை இயக்கும் கருவியாகும். நாம் நமது அன்றாட வேலைகள் எமது எதிர்காலத்தை சரியாக அமைத்துக்கொள்ள முடியும்.

உடலுக்கு புரோட்டீன் சத்து என்பது மிகவும் முக்கியம். நாம் போதுமான அளவு புரோட்டீனை தினமும் எடுத்துக் கொண்டால் மட்டுமே நம்முடைய உடல் ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் இருக்கும்.

உடலில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் அதை நம் உடல் சில அடையாளங்கள் மூலம் வெளிப்படுத்தும். அந்த வகையில் கைகளின் விரல்களில் வெள்ளைக்கோடுகள் வெளிப்பட்டால் உடலில் என்ன பிரச்சனை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கை விரல்களில் இந்த அடையாளங்கள் இருக்கா? உடலில் இந்த நோய் இருப்பது உறுதி | Protein Signs That Shows You Have Deficiencyநாம் தினமும் உணவு சாப்பிடும் போது அதில் அனைத்து வகையான சத்துக்களும் இருக்க வேண்டும். உடல் வளர்ச்சிக்கு தேவையான முக்கியமான சத்து என்றால் அது புரோட்டீன் சத்து தான்.

இந்த சத்து உடலில் குறைந்தால் கால்களில் வீக்கம், தலை முடி உதிர்வு, நகங்கள் எளிதில் உடைந்து போவது, சரும பிரச்சனை, ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள், சீரற்ற மாதவிடாய், செரிமான நொதிகள் உற்பத்தி குறைந்ததால் செரிமானம் தாமதமாக நடைபெறுதல், தசை வலி, கால் வலி, நிதானமாக நடப்பதில் சிக்கல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

கை விரல்களில் இந்த அடையாளங்கள் இருக்கா? உடலில் இந்த நோய் இருப்பது உறுதி | Protein Signs That Shows You Have Deficiencyஇது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அதை நோய் என்று எண்ணி விடாமல் நன்கு சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். இதை தவிர புரோட்டீன் சத்து உடலில் குறையும் போது முதல் அறிகுறியாக காட்டுவது விரல்களின் வெள்ளை கோடு தான்.

இது சிலருக்கு ஒரு விரல், இரண்டு விரல், சிலருக்கு எல்லா விரலிலும் வரும். இதில் எல்லா விரலிலும் வெள்ளை கோடுகள் போன்ற அடையாளங்கள் தென்பட்டால் அவர்கள் அதிக சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

அசைவ உணவுகளில் முட்டையின் வெள்ளை கரு, மீன், சிக்கன் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும். இது தவிர ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சி போன்றவை சாப்பிட வேண்டும்.

கை விரல்களில் இந்த அடையாளங்கள் இருக்கா? உடலில் இந்த நோய் இருப்பது உறுதி | Protein Signs That Shows You Have Deficiencyசைவ உணவுகள் எடுத்துக்கொண்டால் சியா விதைகள், பூசணி விதைகள், ஆளி விதைகள் போன்ற விதைகள் பருப்பு மற்றும் பீன்ஸ் போன்றவற்றை சாப்பிடுதல் அவசியமாகும்.

பால் சார்ந்த பொருட்களில் பால் மற்றும் பன்னீர், தயிர் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகமாக வேலை செய்பவர்களுக்கு இது போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ள முடியாத காரணம் இருக்குமாயின் அவர்கள் புரோட்டீன் சப்ளிமெண்டுகள் எடுத்துக்கொள்ளலாம்.