லிபியாவில் சமாதானத்தை மேற்கொள்வதற்காக சிறப்பு தூதுவரை நியமிக்குமாறு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸிடம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை கேட்டுக்கொண்டுள்ளது.
இருப்பினும் இந்த தீர்மானத்தின் வாக்களிப்பதைத் ரஷ்யாவும் சீனாவும் தவிர்த்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. அரசியல் பணிக்கு தலைமை தாங்கிய கசன் சலாமே, அமைதிக்கு மத்தியஸ்தம் செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் மன அழுத்தத்தை காரணம் காட்டி மார்ச் மாதம் விலகினார்.
இந்நிலையில் அன்டோனியோ குட்ரெஸ் முறைசாரா முறையில் ஒரு மாற்றீட்டை முன்மொழிந்தார், ஆனால் ஒருவர் ஐ.நா.வின் பணியை நடத்தவும், மத்தியஸ்தத்தில் கவனம் செலுத்த ஒரு சிறப்பு தூதுவராகவும் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்பியது.
அதன் பிரகாரம் நேற்று செவ்வாய்க்கிழமை அந்த முன்மொழிவுக்கு பாதுகாப்பு சபையில் அனுமதி கிடைத்தது.
இருப்பினும் குறித்த முன்மொழிவில் தாங்கள் பரிந்துரைத்த திருத்தங்கள் இல்லை என தெரிவித்து ரஷ்யாவும் சீனாவும் தீர்மானத்தில் வாக்களிப்பதில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.