ஜப்பானின் இபராகி மாகாணத்தில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக, ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (திங்கட்கிழமை) காலை 6.34 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன் மையப்பகுதி 36.7 டிகிரி வடக்கிலும், 141.6 டிகிரி தீர்க்கரேகையின் கிழக்கிலும், 20 கி.மீ ஆழத்திலும் இருந்தது.
மேலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை வெளியாகவில்லை. நிலநடுக்கம் குறித்த பாதிப்பு மற்றும் சேதங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.