ஜோதிட சாஸ்திப்படி எந்த நாள், எந்த கிழமை மற்றும் நட்சத்திரத்தில் வங்கிக் கணக்கு தொடங்கினால் சேமிப்பு உயரும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ஜோதிடத்தின் மீது அதிக ஆர்வம் இருப்பவர்கள், எந்தவொரு செயலை செய்யும் முன்பு, நாள், கிழமை, நட்சத்திரம் பார்த்து தான் செய்வார்கள்.
இவ்வாறு செய்வது வழக்கம் மட்டுமின்றி, செய்தால் எல்லாம் நன்றாகவே நடக்கும் என்ற ஐதீகமும் உள்ளது. இதனால் தான் தொழில் தொடங்குவது, திருமண காரியம், நிச்சயதார்த்தம், வீடு கிரஹபிரவேசம், வியாபாரம் என அனைத்திற்கும் நல்ல நேரம் பார்க்கின்றனர்.
வேலையில் சேர்வதற்கு கூட நல்ல நாள் பார்த்தே சேரும் நிலையில், தற்போது வங்கியில் கணக்கு தொடங்கும் முன்பு எந்த நேரத்தில் தொடங்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நாம் சம்பாதிக்கும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும் வகையிலும், வங்கி சேமிப்பு உயரும் வகையில் நல்ல நேரம், கிழமை, நாள், நட்சத்திரம் என்று பார்க்காமல் விட்டால் அது கெடு பலன்களை கொடுக்கும்.
புதிதாக வங்கி கணக்கு துவங்க நினைப்பவர்கள் சரியான நேரம், காலம், கிழமை பார்த்து துவங்கினால் சேமிப்பு கோடி கோடியாய் அதிகரிக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
லட்சுமி தேவி, செல்வ லட்சுமியின் அடையாளமாக இருக்கும் பணத்தை சேமிப்பதில் நாம் கவனம் செலுத்தினால் வெற்றி உங்களை தேடி வந்து கொண்டே இருக்குமாம்.
குருவிற்கு உகந்த நாளான வியாழக்கிமை தான் அதற்குரிய நாள். அந்த நாளில் வங்கிக் கணக்கு தொடர்ந்தால், பணவரவு வந்து கொண்டே இருக்குமாம்.
கிழமை மட்டுமின்றி நட்சத்திரமும் கூடி வர வேண்டும். அதாவது வியாழக்கிழமை உடன் பூரட்டாதி நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் கணக்கு தொடங்கவும்.
வீட்டிலும் புதிதாக மண் உண்டியலில் பணம் சேர்க்க ஆரம்பித்தாலும், இந்த கிழமை மற்றும் நட்சத்திரத்தில் வாங்கி சேர்க்க ஆரம்பிக்கலாம்.
இப்படி ஒரு முறை நீங்கள் செய்தால் பணம் உங்களை விட்டு போகவே போகாது. உங்களையே சுற்றி சுற்றி வரும். பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.