பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா நிலைமை மற்றும் வெட்டுப்புள்ளி வெளியீடு தொடர்பான வழக்கு ஆகியவற்றின் காரணமாக வெட்டுப்புள்ளி வெளியீடு தாமதமடைந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2019ஆம் வருட பெறுபேறுகள் கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.