இந்தியில் லால் இஷ்க், மேரி துர்கா உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருந்தவர் நடிகை ப்ரெக்ஷா மேத்தா. 25 வயதாகும் இவர் க்ரைம் பேட்ரோல் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களிடம் பிரபலமானார். மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்த இவர் மும்பையில் தங்கி டிவி தொடர்களில் நடித்து வந்தார். கொரோனா ஊரடங்கின் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் தனது சொந்த ஊர் சென்று அங்கு கடந்த இரண்டு மாதமாக தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸ் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், முதற்கட்ட விசாரணையில் ப்ரெக்ஷா கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், மேலும் விசாரணையைத் தீவிரப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நின்று போன நிலையில், வேலை இல்லாததால் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் ப்ரெக்ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்க பதிவொன்றில் கனவில் மரணம் ஏற்படுவது கொடுமையான ஒன்று என குறிப்பிட்டுள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பாக இதேபோல் 32 வயதாகும் பஞ்சாபைச் சேர்ந்த மன்மீத் கிரேவால் என்ற டிவி நடிகர் ஊரடங்கால் ஏற்பட்ட மன அழுத்தத்தாலும், கடன் தொல்லையாலும் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
லாக்டவுன் மன அழுத்தம் : இளம் டிவி நடிகை தூக்கிட்டு தற்கொலை
- Master Admin
- 27 May 2020
- (791)
தொடர்புடைய செய்திகள்
- 20 September 2026
- (86)
நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகள் சாந்...
- 25 July 2026
- (139)
பிரதீப் ரங்கநாதனின் 33வது பர்த்டே!! சொத்...
- 01 July 2026
- (114)
கட்டா குஸ்தி 2 மீனு மிஸ் இவங்கதான்!! வயச...
யாழ் ஓசை செய்திகள்
சர்வதேச சந்தையில் மீண்டும் எகிறும் தங்கம்
- 20 September 2026
மீண்டும் எரிபொருள் விலையில் அதிகரிப்பு? அமைச்சரின் அறிவிப்பு
- 20 September 2026
12 மாவட்டங்களுக்கு மண்சரிவு அவசர எச்சரிக்கை
- 20 September 2026
வெளிநாடொன்றில் 100 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட புதிய பூனை இனம்
- 20 September 2026
பலத்த இடி மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை
- 20 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?
- 20 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் மண்டாடி உலகளவில் செய்துள்ள வசூல்
- 20 September 2026
Daayra (இந்தி): திரை விமர்சனம்
- 20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
- 17 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
