ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது. 

அப்படி குறிப்பிட்ட சில ரட்சத்திரங்களில் பிறந்தவர்கள் திருமண வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமானவர்களாக அறியப்படுகின்றார்கள்.

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களை திருமணம் செய்வது அதிர்ஷ்டமாம்... ஏன்னு தெரியுமா? | Which Nakshatras Make Ideal Life Partners

இவர்கள் திரமண வாழ்க்கையை அதிக மகிழ்ச்சி மற்றும் அதிர்ஷ்டம் நிறைந்ததாக மாற்றுகின்றார்கள்.இப்படிப்பட்ட நட்சத்திரங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

ரோகிணி

ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதியாக சந்திரன் இருப்பதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் வசீகரமான தோற்றம் மற்றும் அன்பான குணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களை திருமணம் செய்வது அதிர்ஷ்டமாம்... ஏன்னு தெரியுமா? | Which Nakshatras Make Ideal Life Partners

இவர்கள் திருமண உறவில் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர்களாக இருப்பதால், எந்த சூழ்நிலையிலும் காதல் உறவை விட்டுக்கொடுக்காதவர்களாக இருப்பார்கள். 

இவர்களை திருமணம் செய்துக்கொள்பவர்கள் வாழ்வில்  செல்வம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சிக்கு ஒருபோதும் பஞ்சமே இருக்காது. 

பூசம்

பூசம்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனிபகவானின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் என்பதால், திருமண  வாழ்க்கைக்கு மிகவும் பொருத்ததமான நட்சத்திரங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகின்றது.

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களை திருமணம் செய்வது அதிர்ஷ்டமாம்... ஏன்னு தெரியுமா? | Which Nakshatras Make Ideal Life Partners

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் வலுவான மற்றும் உறுதியான மனநிலையை கொண்டவர்களாக இருப்பார்கள். 

திருமண பந்தத்துக்கும் தங்கள் வாழ்க்கைத்துணைக்கும் அதிக முக்கியத்துவமும் மரியாதையும் கொடுப்பவர்களாக இருப்பார்கள். 

இவர்களை திருமணம் செய்துக்கொள்பவர்கள் வாழ்வில்  செழிப்பு, அதிர்ஷ்டம் மற்றும் அமைதியைப் நிலைநாட்டும் ஆற்றல் இவர்களிடம் அதிகமாக இருக்கும். 

மிருகசீரிஷம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதீத புத்திசாலித்தனம் மற்றும் நேர்மையின் சின்னமாக இருப்பார்கள். 

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களை திருமணம் செய்வது அதிர்ஷ்டமாம்... ஏன்னு தெரியுமா? | Which Nakshatras Make Ideal Life Partners

அவர்கள் வாழ்க்கையின் அனைத்து விஷயங்களையும் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நேர்த்தியாக செய்து முடிக்கும் அளவுக்கு பக்குவமானவர்களாக இருப்பதால், இவர்கள் திருமண வாழ்க்கைக்கு மிகவும் உகந்தவர்களாக இருப்பார்கள். 

திருமணத்திற்குப் பிறகு தங்கள் வாழ்க்கைத்துணையின் வாழ்வில் அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் இவர்கள் கொடுப்பார்கள்.

இவர்களிடம் இருக்கும் நிதி முகாமைத்துவ குணம் மற்றும் நுண்ணறிவு இவர்களின் குடும்ப வாழ்க்கையை மேலும் வலுவடைய செய்கின்றது.