பொதுவாகவே ஒவ்வொரு மனிதர்களும் தனித்துவமானவர்கள். இந்த உலகில் யாருமே பர்பெக்ட்டானவர்கள் என்று சொல்ல முடியாது. அனைவருக்குமே ஏதோ ஒரு திறமை கட்டாயம் இருக்கும். அதே போல் குறைபாடும் இருக்கத்தான் செய்கின்றது.
ஒவ்வொருவரும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த வித்தியாசமான வழியை பின்பற்றுகின்றனர், அது சில நேரங்களில் மிகவும் ஆபத்தான அமையும்.
சிலர் எதுவாக இருந்தாலும் இலகுவில் கடந்து செல்வார்கள். தமக்கு தீங்கு செய்தவர்களை கூட இலகுவில் மன்னிக்கும் மனபான்மை உள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் சில ராசியினர் எதையும் இலகுவில் மறக்கவும் மன்னிக்கவும் மாட்டார்கள்.
இவர்களிடம் பழிவாங்கும் இயல்பு அதிகமாக காணப்படும். அதிக எதிர்மறையான ஆளுமை கொண்டவர்கள் கொலை அல்லது பெரிய கொள்ளை போன்ற குற்றங்களைச் செய்யக்கூட தயங்க மாட்டார்கள்.அப்படிப்பட்ட ஆபத்தான ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியினருக்கு தைரியமும் மன உறுதியும் சற்று அதிகமாகவே காணப்படும். இவர்களுக்கு போட்டித்தன்மை இயல்பிலேயே இருக்கும். இவர்களின் மனவலிமை இவர்களை ஒரு போர் வீரரை போல் மாற்றும்.
இவர்களிடம் சவால் விடுவது சற்து கடினமான விடயம் தான். இவர்களை எதிர்பலர்களுக்கு மிகவும் ஆபத்தான எதிரியாக மாறிவிடுவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக்க ராசியினர் பொதுவாக மிகவும் தீவிரமான குணமுடையவர்கள்.
இவர்களிடம் மர்மங்கள் நிறைந்திருக்கும். இவர்கள் மிகவும் விசுவாசமாக நடந்துக்கொள்வார்கள். இவர்களை யாராவது ஏமாற்றினால் மிகவும் ஆபத்தான முறையில் பழிவாங்க ஆரம்பித்து விடுவார்கள்.
மகரம்
எப்போதும் லட்சிய வாதிகளாக இருக்கும் மகர ராசியினர். வாழ்க்கையை ஒரு சதுரங்க விளையாட்டை போல் நினைத்துக்கொள்வார்கள்.
புத்திசாலித்தனமான நகர்வுகள் பற்றியே சிந்திக்கும் இவர்களின் வாழ்வில் யாராவது தொந்தரவு செய்தால் மிகவும் துல்லியமான பதிலடியை கொடுப்பார்களாம்.
எதிரியை பழிவாங்க சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பார்களாம். இந்த ராசியினர் இவர்களுக்கு எதிரியாகிவிட்டால் மிகவும் மோசமாக பழிவாங்குவார்கள்.