பொதுவாக பக்கவாதம் அல்லது மூளைத் தாக்குதல் எனப்படுவது மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் திடீரென நிறுத்தப்படுதல் அல்லது தலைக்குள் இரத்தப்போக்கு ஏற்படும் நிலையை குறிக்கின்றது.
அதாவது மூளையில் இரத்தக்குழாய் வெடித்து இரத்தம் வரும் போது மூளைக்கு செல்லும் இரத்த விநியோகத்தில் அடைப்பு ஏற்படும் போது பக்கவாதம் (stroke) ஏற்படுகின்றது.
பக்கவாதத்தின் அறிகுறிகளைக் கண்டறிந்து உடனடி மருத்துவ உதவியைப் பெற்றால் இயலாமையில் ஆரம்பித்து உயிராபத்து வரையில் இது தாக்கம் செத்தும்.
பக்கவாதத்தின் அறிகுறிகளை எவ்வளவு சீக்கிரம் கண்டறிகிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் குணமடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பக்கவாதத்தின் அறிகுறிகள் நாள் முழுவதும் தென்படுவதை பார்க்கிலும் இரவு 10 மணிக்கு மேல் உடலில் ஏற்படும் சில முக்கிய மாற்றங்கள் பக்கவாதத்தின் அபாய அறிகுறிகளாக கருத்தப்படுகின்றது. அவை தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
இரவு நேரங்களில் உடலின் ஒருபகுதி பலவீனமாகவோ அல்லது மரத்துப் போவது போன்றோ இருந்தால், அது பக்கவாதம் ஏற்படப் போவதற்கான முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.
அவ்வாறு உடலின் ஒருபக்கத்தில் பலவீனமாவது அல்லது மருத்து போவது போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், அதனை அலட்சியப்படுத்தாது மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.
குறிப்பாக இரவு நேரங்களில் அடிக்கடி குழப்பமான மனநிலை அல்லது பேசுவதில் சிரமத்தை உணர்வது பக்கவாதத்தின் அபாய அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.
அதாவது பேசும் போது வார்த்தைகளில் தெளிவாக சொல்வதில் பிரச்சினை ஏற்பட்டாலோ, வாக்கியங்களை விரைவாக உருவாக்குவதில் சிரமம் ஏற்பட்மாலோ இது பக்க வாதத்தின் அபாய எச்சரிக்கை ஆகும்.
எந்த காரணமும் இன்றி திடீரென்று பார்வையில் பிரச்சனை ஏற்படுவது, குறிப்பாக மங்கலான பார்வை, இரண்டு இரண்டாக தெரிவது போன்ற அறிகுறிகள் இருந்தால், அது பக்கவாதத்தின் முக்கிய அறிகுறியாகும்.
திடீரென்று அடிக்கடி தலைவலி ஏற்படுவது, மேலே குறிப்பிட்ட அறிகுறிகளுடன் சேர்ந்து அடிக்கடி தலைவலி பிரச்சினை இருந்தால் அவசியம் மருத்துவ உதவியை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.
அடிக்கடி தலைச்சுற்றலையோ அல்லது தடுமாற்றத்தையோ உணர்ந்தால், அது பக்கவாதத்தின் எச்சரிக்கை அறிகுறியாக பார்க்கப்படுகின்றது . குறிப்பாக இந்த அறிகுறிகளை இரவு நேரத்தில் ஏற்படால் தாமதிக்காது மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது இவசியம்.