அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியில், கார் பார்க்கிங் ஒன்றில் தனியாக சிறுவன் ஒருவன் கதறி அழுதுகொண்டு நிற்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, பொலிசார் அங்கு விரைந்துள்ளனர்.

தன் தாயைக் காணாமல் அவன் அழுவதைத் தெரிந்துகொண்ட பொலிசார், அங்கு சில கால் தடங்கள் அருகிலிருந்த குளத்தை நோக்கி செல்வதை கவனித்துள்ளனர்.

அந்த காலடித் தடங்களை பின் தொடர்ந்து சென்ற பொலிசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம், அந்த குளத்தில் இரண்டு பேர் உயிரிழந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடல்கள் அந்த சிறுவனின் தாய் மற்றும் அண்ணனின் உடல்கள் என்பதை பொலிசார் அறிந்துகொண்டார்கள்.

video

அந்த பெண்ணின் பெயர் Warda Syed (35) என்றும் உயிரிழந்த அவரது மகனின் பெயர் Uzair Ahmed (11) என்றும் தெரியவந்துள்ளது.

அழுதுகொண்டிருந்த அந்த ஆறு வயது சிறுவனின் பெயர் வெளியிடப்படவில்லை. அவர்கள் ஏன் அங்கு வந்தார்கள், உயிரிழந்த இருவரும் ஏன் தண்ணீருக்குள் இறங்கினார்கள் என்பது தெரியவில்லை.

பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.