இன்று பெரும்பாலான நபர்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப்பில் Storage அதிகமாகிவிட்டால் எவ்வாறு சரிசெய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
இன்று உலகம் முழுவதும் பெரும்பாலான நபர்கள் கையில் மொபைல் போன் இல்லாமல் இருப்பதில்லை. அதில் வாட்ஸ் அப் என்ற செயலியையும் அதிகமாகவே பயன்படுத்தி வருகின்றனர்.
ஆம் கடல் தாண்டி இருப்பவர்களிடம் பக்கத்தில் இருந்து பேசுவது போன்ற வசதிகளை கொடுத்துள்ள வாட்ஸ் அப் அதிக நன்மையை செய்து வருகின்றது.
இந்நிலையில் வாட்ஸ் அப்பில் வரும் காணொளி, புகைப்படம் அனைத்தும் உங்களது போன் Galary-ல் சேமித்து வைக்கப்படுகின்றது.
இதனால் Storage நிரம்பிவிட்டால் தொலைபேசியில் சிக்கல் ஏற்படுகின்றது. மேலும் இவை தொலைபேசியை பயன்படுத்தும் போது அடிக்கடி வாட்ஸ் அப் பாவனையாளர்களின் மனதில் ஒரே ஒரு கேள்வி தான் எழும்பும்.
வாட்ஜ் அப்பில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போனில் சேமிக்கப்படுவதை நிறுத்துவது எப்படி? என்பது தான். இதனை தடுக்க இரண்டு வழிகளை நாம் பின்பற்றலாம்.
முதலில் குறிப்பிட்ட நபர்களிடம் இருந்து வரும் புகைப்படம், காணொளியை மட்டும் போனில் வராமல் நிறுத்த வேண்டுமா? அல்லது நமது வாட்ஸ் அப்பில் இருக்கும் அனைத்து நபர்களிடம் இருந்து வருவதை நிறுத்த வேண்டுமா? ஏனெனில் இரண்டு ஆப்ஷன்கள் காணப்படுகின்றது.
எந்தவொரு புகைப்படம் காணொளியையும் சேமிக்க விரும்பவில்லை எனில் முதலில் வாட்ஸ் அப்பை திறந்து, அதன் வலது புறத்தில் உள்ள மூன்று புள்ளிகளை அழுத்தி, Setting - Chats - Media Visibility என்ற விருப்பத்திற்கு சென்று ஆஃப் செய்து விடவும்.
குறிப்பிட்ட அறட்டைக்கு இவ்வாறு செய்ய வேண்டும் எனில், அரட்டையைத் திறந்த பிறகு, மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து, View Contact என்பதைத் தட்டவும். அதன் பிறகு மீடியா விசிபிலிட்டி ஆப்ஷனை ஆஃப் செய்யவும்.