வீட்டில் செல்வம் பெருக லட்சுமி தேவியின் படத்தை எந்த திசையில் வைத்து, எவ்வாறு வழிபட வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மகாலட்சுமி, திருமாலின் மனைவி, செல்வத்தின் தெய்வம் என்று இந்து மதத்தில், வீட்டில் செல்வம், ஐஸ்வர்யம், முன்னேற்றம் ஆகியவற்றிற்காக லட்சுமியை வழிபட்டு வருகின்றனர்.
வாஸ்து விதிகளின்படி லட்சுமி தேவியின் புகைப்படத்தினை சரியான திசையில் வைத்து வழிபட வேண்டும்.
ஆனால், லட்சுமியின் அனைத்து வகையான படங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள், நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளது. ஆதலால் எந்த மாதிரியான படத்தினை வைத்து நாம் வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
லட்சுமி மகிழ்ச்சியான தோரணையில் இருக்கும் படத்தினை தேர்வு செய்து வைத்தால் செல்வம், நேர்மறை ஆற்றல் வீட்டிற்கு ஏற்படம். மேலும் தாமரை மலரில் இருக்க வேண்டுமாம்.
ஆனால் நின்ற கோலத்தில் உள்ள படத்தை வீட்டில் வைக்கக்கூடாது. இவை சஞசலமானது என்று கூறப்படுவதுடன், விரைவில் லட்சுமி தேவி வெளியேறிவிடுவார் என்று கூறப்படுகின்றது.
வடக்கு அல்லது வடகிழக்கு திசைகளில் வைத்தால் நேர்மறை ஆற்றல் ஈர்க்கப்படும். அவ்வாறு இடம் இல்லையெனில், கிழக்கு திசையிலும் வைக்கலாம்.
முடிந்தவரை பெரிய படமாகவும், தெளிவாக இருப்பதாகவும் வைக்க வேண்டும். இவை எதிர்மறையை ஈர்க்குமாம். படங்களை வைத்தால் அழுக்கு, தூசி இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
படம் நமது கண்பார்வைக்கு சற்று மேலே இருக்குமாறு இருக்க வேண்டும். இவை நீங்கள் வணங்குவதையும், மதிப்பதையும் காட்டுகின்றது. மற்ற தெய்வங்களுடன் லட்சுமி தேவி படத்தினை வைப்பது சரியல்ல.
துக்கம் மற்றும் துன்பத்தைக் காட்டும் லட்சுமி தேவியின் படத்தினை தவிக்க வேண்டும். அதே போன்று வன்முறை அல்லது ரத்தத்தினைக் காட்டும் படங்களையும் வைக்கக்கூடாது.
லட்சுமி படத்தை வைத்து பூஜை செய்யும் இடம் எப்பொழுதும் சுத்தமாகவும், புனிதமாகவும் வைத்திருக்க வேண்டும்.
படத்தினை அவ்வப்போது இடமாற்றம் செய்தால் நன்மை அளிப்பதுடன், ஆற்றல் ஓட்டத்தையும் புதுப்பிக்கின்றது.
லட்சுமி படத்தின் கீழே தேவையற்ற பொருட்கள், அழுக்கு இவற்றினை வைக்கக்கூடாது. ஏனெனில் லட்சுமி தேவிக்கு இடம் சுத்தமாக இருக்க வேண்டுமாம்.