சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறை நாட்களில் பயணக் கட்டுப்பாடுகளை அமல்படுத்த இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

எனினும் நாடளாவிய ரீதியில் புத்தாண்டின் போது பெரிய கூட்டங்கள் தடை செய்யப்படும் என்று ஆரம்ப சுகாதார, தொற்றுநோய் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே தெரிவித்தார்.

விடுமுறை நாட்களில் சுகாதார வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பண்டிகையின் போது குடும்பங்கள் ஒன்று கூடுவது தடுக்கப்படும். ஆனால் இது பயணக் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்துவதாக அமையாது. அரசாங்கம் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அக்கறை காட்டவில்லை என்று அவர் கூறினார்.