ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறப்பெடுக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது இவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்கள் என்பவற்றில் பெருமளவு தாக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
இந்த வகையில் குறிப்பிட்ட சில நட்சத்ரங்களில் பிறப்பெடுத்தவர்கள் ஆள்வதற்காகவே பிறப்பெடுத்தவர்களாக இருப்பார்களாம். இவர்கள் சொல்லும் சொல்லுக்கு அனைவரும் கட்டுப்படும் அளவுக்கு வலிமையான தலைமைத்துவ பண்புகள் இவர்களுக்கு இருக்கும்.

அப்படி பிறப்பிலேயே ராஜ யோகத்துடன் பிறப்பெடுத்த நட்சத்திரங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அஸ்வினி நட்சத்திரம்

27 நட்சத்திரத்திரங்களுள் முதன்மை வகிக்கும் நட்சத்திரமாக இந்த நட்சத்திரம் பார்க்கப்படுகின்றது.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எங்கு சென்றாலும் தலைமை வகிக்கும் வாய்ப்பை பெறுவார்கள்.
இவர்கள் இயல்பிலேயே மற்றவர்களை கட்டுப்பாட்டில் வைக்கும் தன்மையை கொண்டிருப்பார்கள். அவர்கள் பேச்சே கட்களை போல் தான் இருக்கும்.
பரணி நட்சத்திரம்

பரணி நட்சத்திரம் சக்திவாய்ந்த நட்சத்திரங்களின் பட்டியலில் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்காலத்தில் ராஜ வாழ்க்கை வாழ்வார்கள்.
இவர்கள் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். அதனால் இயல்பாகவே வசீகதன்மை மற்றும் அனைவரையும் அடக்கியாளும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கும்.
இவர்கள் மற்றவர்களுக்கு கட்டளையிடுவதிலும் வல்லவர்களாக இருப்பார்கள். வாழ்நாள் முழுவதும் செல்வ செழிப்புடன் வாழும் யோகத்தை கொண்டவர்களாக இருப்பார்கள்.
பூச நட்சத்திரம்

பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் நம்பிக்கைக்கும் விசுவாசத்துக்கும் பாத்திரமானவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் தோற்றம் மற்றும் முக அமைப்பு ராஜ தோற்றத்தில் அமைந்திருக்கும். இயல்பாகவே இவர்கள் தலைமைதுவ பண்புகளை கொண்டிருப்பார்கள்.
இவர்களின் பேச்சில் எப்போதும் இனம் புரியாத வசீகரம் காணப்படும். இவர்கள் ராஜ வாழ்க்கை வாழ்வதற்காகவே பிறப்பெடுத்தவர்கள்.
