உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக முடங்கி இருப்பது தெரிந்ததே. கொரனோ பரபரப்பு முடிந்தவுடன் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்து தயாரித்து இயக்கவுள்ள ’தலைவன் இருக்கின்றான்’ என்ற படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. இந்த படம் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் நடித்த ’தேவர் மகன்’ படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ’தலைவன் இருக்கின்றான்’ படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்த உள்ளதாகவும் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் உள்ளிட்ட பல தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டு இருக்கின்றன.
இந்த நிலையில் ‘தலைவன் இருக்கின்றான்’ படம் குறித்த முக்கிய தகவல்களை கமல்ஹாசன் மற்றும் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் ஆகியோர் ரசிகர்களிடையே ஜூன் 11 ஆம் தேதி மாலை 5 மணிக்கு உரையாட இருப்பதாகவும் இந்த உரையாடல் சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பாக ஒளிபரப்பாகும் என்றும், இதன் மூலம் ’தலைவன் இருக்கிறான்’ படம் குறித்த அரிய பல தகவல்களை ரசிகர்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கமல் மற்றும் ஏஆர் ரஹ்மான் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.