பொதுவாகவே காதல் விடயத்தில் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்துக்கொள்ளும் துணை கிடைக்க வேண்டும் என்று தான் அனைவரும் ஆசைப்படுவார்கள்.
காதலில் ஏமாற்றத்தையும் துரோகத்தையும் சந்திப்பது தாங்க முடியாத மனவலியை கொடுக்கும். இது உயிருடன் ஒருவரை பிணமாக நடமாட வைத்துவிடும் அளவுக்கு மோசமான பாவமாக பார்க்கபடுகின்றது.
ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் காதல் விடயத்தில் விசுவாசத்துக்கும், நேர்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்களாம்.
இவர்கள் காதல் விடயத்தில் துணையை ஒருபோதும் ஏமாற்ற மாட்டார்கள் அப்படி நேர்மையின் சின்னமாக திகழும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாகவும் நினைத்ததை போராடி பெரும் அளவுக்கு கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள்.
இவர்கள் காதல் விடயத்தில் உணர்வு பூர்வதாக பிணைக்கப்பட்டவர்களாக இருப்பதுடன் தனது துணைக்கு மனதளவிலும் துரோகம் நினைக்காதவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் எந்த உறவிலும் மிகவும் விசுவாசமாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருப்பார்கள்.
அவர்கள் வாழ்க்கை முழுதும் நேர்மையான செயல்களை செய்வதில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றனர்.
கடகம்
கடக ராசியில் பிறந்த பெண்கள் சந்திரனால் ஆளப்படுவதால் பார்ப்பதற்கு வசீகரமான தோற்றத்தையும் அமைதியான சுபாவத்தையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசி பெண்கள் தங்கள் துணைக்கு கனவிலும் ஒருபோதும் துரோகம் நினைக்கமாட்டார்கள்.இந்த ராசி பெண்களை காதலிப்பது ஒரு வரம்.
இவர்கள் தங்களின் துணையின் மகிழ்ச்சிக்காக தங்களின் விருப்பங்களையும் கூட விட்டுக்கொடுக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்த பெண்கள் சனிபகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், நீதியின் மறு உருவமாக இருப்பார்கள்.
யாரையும் ஏமாற்றும் பழக்கம் இவர்களுக்கு கொஞ்சமும் இருக்காது. காதல் விடயத்தில் அதீத விசுவாசமும் நேர்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
கும்ப ராசி பெண்களை காதலிப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இவர்கள் காலிதலுக்கு ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டார்கள்.