சத்தான சுவையான மொறு மொறு முருங்கை கீரை வடை இப்படி செய்தால் பிரமாதம்! தற்போது துரித உணவின் வகைகள் பழிரபலமாக இருப்பதால் பாரம்பரிய உணவுகளை மறந்து விடுகிறோம்.

முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன.முருங்கை இலையில் உள்ள சத்துக்கள் மூளையின் செயற்பாட்டிற்கு மிகவும் முக்கியமாக உணவாகும்.

இது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தும்.இதை எல்லோரும் விரும்பி உண்ண மாட்டார்கள். இதற்காக இதை குறிப்பிட்ட ரெசிபிகள் மூலம் உடலில் உட்செலுத்த முடியும்.அந்த வகையில் தான் இன்று முருங்கை கீரையில் வடை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • பருப்பு – 3
  • 4 பல்லு பூண்டு
  • 3 துண்டு இஞ்சி
  • 3 பச்சை மிளகாய் 2
  • வர மிளகாய் 1 ஸ்பூன்
  • சோம்பு 4 பட்டை
  • 2 வெங்காயம் 1
  • நிறைய கொத்தமல்லி இலை 1 கொத்து கருவேப்பிலை 1 கப்
  • முருங்கைக்கீரை அரை ஸ்பூன் சீரகம் பொறிக்கும் அளவு எண்ணெய்

செய்யும் முறை

முதலில் மிக மிக முக்கியமான பருப்பை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.இதன் பின்னர் பூண்டு, இஞ்சி, மிளகாய், வத்தல் , சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துகொள்ளவும்.

பின்னர் இதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, சீரகம், சேர்த்து கிளரவும். தொடர்ந்து வட்டமாக தட்டி எண்ணெய்யில் சேர்த்து பொறித்து எடுக்கவும்.

இப்படி செய்து குழந்தைகளுக்கு நீங்கள் சாப்பிட கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.ஆஸ்துமா, மார்சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை ரசம் அல்லது சூப் மிகவும் நல்ல பலன் தரும். முருங்கை இலையினுடைய பொடியானது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது.

இது மிக முக்கியமாக ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகின்றது.