சிவனின் அருளை பெறுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் மன உறுதியுடன், வரும் தடைகளை தாண்டி விடாப்பிடியாக முறையாக வழிபாடு செய்தால் சிவனின் அருளை பெற முடியும்.

சிவனை முறையாக வழிபடுவதால் நம்முடைய கர்ம வினைகள் நீங்கும். தீய கர்மாக்களில் இருந்து விடுபட சிவனை வழிபடுவதே ஒரே வழி. சிவ பெருமானை ஒரு சில குறிப்பிட்ட முறைகளில் வழிபட்டால் அவரின் அருளை எளிதில் பெற முடியும்.

திங்கட்கிழமை எப்படி வழிபட்டால் சிவனின் அருளை பெறலாம்? | Monday Sivan Arul Pera Eliya Valipadu

சிவ வழிபாட்டில் ஈடுபடும் போது சிவனின் அருள் மட்டுமின்றி நமக்குள் சிவத்தை உணரும் தன்மை, ஆன்ம பலம் போன்ற பலவிதமான நன்மைகளை நம்மால் பெற முடியும்.

தெய்வங்கள் அனைத்திற்கும் தலைவனாக விளங்கக் கூடியவர் சிவ பெருமான் என இந்து புராணங்கள் சொல்கின்றன. அதனாலேயே சிவனுக்கு மகாதேவன் என்ற திருநாமம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

அதே போல் உலக உயிர்கள் உற்பத்தியாவதும், ஒடுங்குவதும் சிவனுக்குள் தான் என சொல்லப்படுகிறது. ஆதியும் அந்தமும் இல்லாதவர், அனைத்திற்கும் அப்பாற்பட்டவர் என சிவ பெருமானை வேதங்கள் போற்றுகின்றன.

திங்கட்கிழமை எப்படி வழிபட்டால் சிவனின் அருளை பெறலாம்? | Monday Sivan Arul Pera Eliya Valipaduசிவனின் அருள் இருந்தால் பிறப்பு-இறப்பு இல்லாத முக்தி நிலையை அடைய முடியும் என்கிறார்கள். சிவனின் அருளை பெறுவதற்கு முனிவர்களும், ரிஷிகளும் பல ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்ததாக சொல்லகிறார்கள்.

ஆனால் தற்போதைய காலத்தில் அப்படி தவம் இருப்பது சாத்தியம் இல்லாதது. அப்படியானால் சிவனின் அருளை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என பலரும் தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால் சில எளிமையான விஷயங்களை தொடர்ந்து செய்து வந்தாலே சிவனின் அருளை பெற்று விடலாம் என சொல்லப்படுகிறது.

பக்தி செய்வதும், முழுவதுமாக சரணாகதி அடைவதுமே சிவனின் அருளை பெறுவதற்கு மிகச் சிறந்த வழியாகும். சிவனின் மந்திரங்களை, குறிப்பாக பஞ்சாட்சர மந்திரமான "ஓம் நம சிவாய" மந்திரத்தை தினமும் உச்சரிப்பது சிவனின் அருளை பெற உதவும்.

திங்கட்கிழமை எப்படி வழிபட்டால் சிவனின் அருளை பெறலாம்? | Monday Sivan Arul Pera Eliya Valipaduசிவ பெருமானின் திருநாமங்களை மீண்டும் மீண்டும் உச்சரிப்பதால் சிவ குணங்கள் நமக்குள் வர துவங்கும். சிவத்தை உணரும் ஆற்றல் கிடைக்கும் போது சிவனின் அருளும் முழுவதுமாக கிடைக்கும்.

சிவ வழிபாடு செய்வதும், சிவனின் லிங்க ரூபத்திற்கு தொடர்ந்து பூஜை செய்வதும் ஆன்ம பலத்தை அதிகரிக்கச் செய்யும். லிங்கத்திற்கு பால், தயிர், தேன், தண்ணீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது, மலர்கள் படைத்து, பூஜை செய்வது ஆகியன சிவனின் மனதை குளிர செய்யும்.

சிவலிங்கம் என்பது சிவனின் அருவுருவமாகும். இதனை அபிஷேகம் செய்து வழிபடுவதன் மூலம் சிவனுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக நாம் மாற முடியும்.

திங்கட்கிழமை எப்படி வழிபட்டால் சிவனின் அருளை பெறலாம்? | Monday Sivan Arul Pera Eliya Valipadu

சிவனின் அருளை விரைவாக பெறுவதற்கு மிக சிறந்த வழி ருத்ராபிஷேகம் ஆகும். சிவன் என்றாலே இன்பத்தை வழங்குபவர் என்று பொருள். காதல், திருமணம், மகிழ்ச்சி, செல்வம், சக்தி, ஞானம் போன்றவற்றை வழங்குபவராக சிவ பெருமான்.

எளிதில் மனம் மகிழ்ந்து, பக்தர்களுக்கு அருள் செய்து, அவர்களுக்கு வேண்டிய வரங்களை தரக் கூடியவர் சிவ பெருமான். ருத்ராபிஷேகம் சிவனை மகிழ்விக்க செய்யப்படும் மிக முக்கியமான பூஜையாகும்.

சிவனுக்கு விருப்பமான, மிக நீண்ட சடங்கும் ருத்ராபிஷேகம் தான். ருத்ராபிஷேகம் செய்வதும், அந்த யாகத்தில் கலந்து கொள்வது வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க வழியை அருளக் கூடியதாகும்.

சிவனை அபிஷேக பிரியர் என்பார்கள். பலவிதமான பொருட்களால் அவருக்கு அபிஷேகம் செய்து, அவரை குளிர்ப்பது அவருக்கு மிகவும் விருப்பமான ஒன்றாகும்.

திங்கட்கிழமை எப்படி வழிபட்டால் சிவனின் அருளை பெறலாம்? | Monday Sivan Arul Pera Eliya Valipadu

பால், தேன், மஞ்சள், சுத்தமான தண்ணீர் கொண்டு அபிஷேகம் செய்வதும், வில்வத்தால் அர்ச்சிப்பதும் சிவனின் அருளை பெற்றுத் தரக் கூடியதாகும். கங்கை நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்து மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

ருத்ராட்சம் சிவனின் அம்சமாக கருதப்படுவதாகும். இதை அணிவதால் அளவில்லாத பலன்களை பெற முடியும். ருத்ராட்சம் மனித குலத்திற்கு ஈசன் அளித்த அருட்கொடையாகவே கருதப்படுகிறது. ருத்ரன், அக்ஷம் என்ற சமஸ்கிருத சொற்களின் இணைவே ருத்ராட்சம் ஆகும்.

சிவனின் கண்ணீரில் இருந்து தோன்றி ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் சிவனின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். சரியான முறைகளை பின்பற்றி ருத்ராட்சத்தை அணியும் போது அதன் பலன்கள் பல மடங்காக அதிகரிக்கும்.