பொதுவாக நமது அருகில் நண்பர்கள், அன்பானவர்கள், நம்பிக்கைக்கு உறியவர்கள் இருந்தால் நாம் எப்பொழுதும் அதிர்ஷ்டசாலிகள் என்று தான் கூற வேண்டும்.
ஜோதிடத்திலும் அவ்வாறான சில ராசியினர் காணப்படுகின்றனர். அதிலும் நட்பை காட்டி நண்பர்களாக இருப்பவர்களுடன் நேரத்தை செலவிடுவது எப்பொழுதும் மகிழ்ச்சியே. அவ்வாறு நண்பர்களாக மகிழ்ச்சியை தரும் ராசியினரை தெரிந்து கொள்வோம்.
சிம்மம்:
சிம்ம ராசியினர் தன்னம்பிக்கை மற்றும் கவர்ச்சிக்கு பெயர் போனதுடன், எங்கு சென்றாலும் மகிழ்ச்சியை தருவதுடன், நண்பர்களையும் சிறப்பாக உணர வைப்பதற்கே விரும்புவார்கள். இந்த ராசியினருடன் நேரத்தை செலவழிக்க யோசிக்கவே செய்யாதீங்க.
துலாம்:
இயற்கையாகவே அமைதியை உருவாக்கும் துலாம் ராசியினர், ராஜதந்திரத்திற்கு பெயர் பெற்றவர்கள். இணக்கமான சூழ்நிலையை உருவாக்குவதுடன், இவர்களிடம் நேரத்தை செலவிடுவது மிகவும் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
தனுசு:
சாகச குணம் கொண்ட இவர்களின் வாழ்க்கை கொண்டாட்டத்திற்கும், உற்சாகத்தையும் அவதானித்தால் அற்புதமான உணர்வை அனுபவிக்க முடியும். இந்த ராசியினருடன் நேரத்தினை செலவழித்தால், பல புதிய விஷயங்களை, அனுபவங்களை பெற்றுக் கொள்ள முடியும்.
கும்பம்:
புதுமையான யோசனைக்கு பெயர் பெற்ற இவர்களுடன் நேரத்தை செலவிடுவது அறிவுத்திறனை தூண்டுவதாகவும், புதிய கருத்துக்களை இவர்களிடமும் தெரிந்து கொள்ள முடியும்.
மீனம்:
உணர்திறன் மற்றும் பச்சாதாபம் கொண்ட இந்த ராசியினர் அமைதியாக இருப்பதுடன், உணர்ச்சிபூர்வமான ஆதரவை கொடுப்பார்கள். இந்த ராசியினருடன் உங்கள் நேரத்தை செலவிட்டால் புரிதல் மற்றும் இரக்கத்தின் அன்பான அரவணைப்பு கிடைக்குமாம்.