பொதுவாகவே ஒவ்வொரு ராசியினரும் ஒவ்வொரு ஆளுமை பண்பைக் கொண்டிருப்பார்கள் என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.

இதன் அடிப்படையில் ஒவ்வொரு ராசியினரும் தனித்துவமான பண்புகள், ஆசைகள் மற்றும் விருப்பங்களை கொண்டுள்ளனர். 

மனைவி சொல்லே மந்திரம் என நினைக்கும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு பாருங்க | Which Zodiac Husband Controlling By Wife

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் வாழ்க்கை முழுவதும் அவர்களின் ஒவ்வொரு செயற்பாடுகளிலும் தாக்கம் செலுத்திக்கொண்டே இருக்கும் என நம்பப்படுகின்றது. 

இந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின்னர் தங்களின் மனைவி சொல்லும் அனைத்து விடயங்களையும் மறுக்காமல் கேட்டுக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம். 

மனைவி சொல்லே மந்திரம் என நினைக்கும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு பாருங்க | Which Zodiac Husband Controlling By Wife

இவர்கள் மனைவி மீது கொண்ட அதீத காதல் காரணமாக மனைவி சொல்லே மந்திரம் என நினைக்கும் அளவுக்கு விசுவாசிகளாக இருப்பார்களாம். அப்படிப்பட்ட ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மகர ராசியினர் சனிபகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இந்த ராசியில் பிறந்த ஆண்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற கொள்கை கொண்டவர்களாக இருப்பார்கள். 

மனைவி சொல்லே மந்திரம் என நினைக்கும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு பாருங்க | Which Zodiac Husband Controlling By Wife

இருப்பினும் திருமணத்தின் பின்னர் அவர்களை முழுமையாக மாற்றிக்கொண்டு மனைவிக்காக வாழ ஆரம்பித்துவிடுவார்கள். 

தங்கள் மனைவியுடன் அனைத்து விடயங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். தங்கள் துணைக்காக அதிக நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். 

இவர்கள் துணைக்கு முன்னுரிமை கொடுப்பதால், அவர்களின் குடும்பத்தாரையும் அனுசரித்து நடக்கக்கூடியவர்கள். மனைவியின் மகிழ்சிக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்கும் தன்மை இவர்களிடம் இருக்கும். 

மீனம்

மீன ராசியில் பிறந்த ஆண்கள் சகிப்புத் தன்மைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். திருமணத்தின் பின்னர் மனைவிக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மனைவி சொல்லே மந்திரம் என நினைக்கும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு பாருங்க | Which Zodiac Husband Controlling By Wife

இவர்கள் அதிகமாக பேசாத போதிலும் அவர்கள் மனைவியின் அனைத்து பேச்சையும் கேட்டு நடக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

அவர்களுக்கு திருமணத்தின் பின்னர் மனைவி தான் உலகம் என்று ஆகிவிடுகின்றது. இவர்கள் பொரும்பாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். இருப்பினும் மனைவியை மிகவும் நேசிப்பவர்களாக இருப்பார்கள். 

கும்பம்

கும்ப ராசியில் பிறந்த ஆண்கள் திருமணம் வரையில் எப்படி இருந்தாலும், தனக்கென ஒரு உறவு கிடைத்ததன் பின்னர் அவர்களின் வாழ்க்கை முழுமையாக மாறிவிடுகின்றது.

மனைவி சொல்லே மந்திரம் என நினைக்கும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு பாருங்க | Which Zodiac Husband Controlling By Wife

மனைவியுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என்றும் மனைவியின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள்.  

தன்னை சுற்றி எத்தனை பேர் இருந்தாலும் இவர்களுக்கு மனைவி தான் மிகவும் முக்கியமான நபராக இருப்பார். அவர்களின் வார்த்தைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள்.