ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறப்பெடுக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவு ஆதிக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது. 

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பிலேயே எதற்கும் துணிந்தவர்களாக இருப்பார்கள்.

பயம் என்ற நாமமே அறியாத ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Born Fearless Personsஅப்படி யாருக்கும் அஞ்சாமல் தங்களுக்கு சரியென தோன்றுவதை தைரியமாக செய்யும் பண்பு கொண்ட பயம் என்ற நாமமே அறியாத ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மேஷம்

மேஷம் ராசியினர் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் இதனால் அவர்கள் இயல்பிலேயே வீரத்துடன் இருப்பார்கள்.

பயம் என்ற நாமமே அறியாத ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Born Fearless Persons

சிறுவயதில் இருந்தே மற்றவர்களுக்கு அஞ்சாமல் மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசும் பண்பு இவர்களிடம் இருக்கும். யாரும் செய்ய முடியாத விடயங்களை கூட துணிந்து இவர்கள் செய்வார்கள். 

இவர்களின் பேச்சில் வீரம் வெளிப்படும் இவர்களின் நடவடிக்கையில் யாருக்கும் பயப்படமாட்டார்கள் என்பது வெளிப்படையாக தெரியும். 

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் பயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் போல் நடந்துக்கொள்வார்கள். 

பயம் என்ற நாமமே அறியாத ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Born Fearless Persons

அவர்கள் மாற்றங்களுக்கோ, மனிதர்களுக்கோ, எந்தவிதமான மோசமான சூழ்நிலைகளுக்கோ ஒருபோதும் பயப்படமாட்டார்கள். இவர்களை பயத்தை பயன்படுத்தி வீழ்த்த முயற்சிப்பது முடியாத காரியமாக இருக்கும். 

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சூரியனால் ஆளப்படுவதால் இவர்களுக்கு இயல்பாகவே தன்னம்பிக்கை மற்றும் தைரியம் உச்ச அளவில் இருக்கும்.

பயம் என்ற நாமமே அறியாத ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Born Fearless Persons

இவர்கள் ஒருபோதும் மற்றவர்களுக்கு அடங்கிப்போக மாட்டார்கள். அடக்கியாளும் குணம் மற்றும் மற்றவர்களுக்கு கட்டளையிடும் தொனி என்பவற்றை நிச்சயம் பெற்றிருப்பார்கள். 

இவர்கள் சிறுவயதில் இருந்தே ஒரு கூட்டத்தின் தலைவராக இருப்பார்கள். இவர்கள் தங்களின் தலைமைத்துவத்தை பாடசாலை பருவத்திலேயே ஆரம்பித்துவிடுவார்கள். அதனால் பயம் என்றால் என்ன என்பதே அறியாதவர்கள் போல் நடந்துக்கொள்வார்கள்.