ஒருவரது ஜாதகத்தை வைத்து அவரது ஆளுமை பற்றிய முழு விவரங்களையும் நம்மால் அறிய முடியும்.
ஆனால் ஒருவரை முதல் முறையாக சந்திக்கும் போது அல்லது ஒருவரை காதலிக்கும் போது அவரை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள நமக்கு அவர்களின் பிறந்த மாதம் ஒத்தழைக்கிறது.
மாதம் தானே என்று அலட்சியம் செய்ய கூடாது . ஒருவர் பிறந்த மாதத்தின் படி அவரது ஆளுமையின் பல ரகசியங்களை வெளிப்படுத்துவதாக ஜோதிடம் மற்றும் வாஸ்து நிபுணர் கூறுகிறார்.
ஒரு ஆண் பிறந்த மாதத்தை வைத்து அவன் எப்படியான குணம் கொண்டவர் என கச்சிதமாக ஜோதிடர் கூறியதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜனவரி
இவர்களின் ஆளுமை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் எதிலும் ஆதிக்கம் செலுத்தும் நபராக இருப்பார்கள். இவர்கள் வேலை, வியாபாரம் அல்லது எந்த உறவாக இருந்தாலும், எப்போதும் தங்களுக்கென்று ஒரு உரிமை தனித்துவமாக நிலைநாட்ட விரும்புவார்கள்.
இவர்கள் பார்ப்பதற்கு கொஞ்சம் முரட்டுகுணம் கொண்டவர்களாக இருப்பார்கள் அனால் இவர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டால் மனதளவில் மிகவும் அப்பாவியான நல்ல குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். ஜனவரி மாதத்தில் பிறந்த ஆண்கள் தங்களுக்கென்று பிரச்சனைகள் இருந்தால் அதை யாருடனும் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள்.
பெப்ரவரி
இந்த மாதத்தில் பிறந்த ஆண்கள் மிகவும் இரகசியமானவர்கள், நட்பானவர்கள், பிறருக்கு ஒரு பிரச்சனை என்றால் அதை காத கொடுத்த கெட்டு அதற்கான தீர்வையும் கொடுப்பார்கள். இவாகள் உழைக்கும் பணத்தை சேமிப்பதில் இவர்கள் பலவீனமானவர்கள்.
தங்களுடைய வார்த்தைகளால் பிறரை எப்படி ஈர்க்க வேண்டும் என்பதை நன்கு தெரிந்தவர்கள். அதிகமாக எல்லோருக்கும் உதவி செய்வார்கள் ஆனால் இவர்களுக்கு நண்பர்களின் வட்டாரம் குறைவாகவே இருக்கும். இந்த மாதத்தில் பிறந்த எல்லா ஆண்களும் பெரும்பாலும் அழகானவர்களாகவே இருப்பார்கள்.
மே
மனதில் கூர்மையாகவும், தோற்றத்தில் அழகாகவும் இருப்பார்கள். பியூட்டி வித் ப்ரெயின் என்ற வாசகம் இவர்களுக்கு பொருந்தும். நீங்கள் ஒருவேளை அவர்களை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம் ஆனால் ஒருபோதும் அவர்களை விட்டு செல்லவும் முடியாது புறக்கணிக்கவும் முடியாது.
இவர்களிடம் சுயநலம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். எப்போதும் ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஆசைப்படுபவர்களாகவும் இருப்பார்கள். அவர்களின் தேர்வுகள் எப்போதும் அற்புதமானவை. செலவு செய்வதற்கு முன் அவர்கள் இருமுறை யோசிக்கின்றனர். அவர்கள் எப்போதும் முதலாளியாகவே இருக்க விரும்புகின்றனர்.