ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட குணங்களில் பெருமளவு ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் தாங்கள் செய்த தவறை எந்த நிலையிலும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

இந்த ராசியில் பிறந்தவர்கள் செய்த தவறை ஒத்துக்கவே மாட்டாங்க... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Never Apologize Their Mistakes

குறிப்பாக இவர்களிடம் மன்னிப்பு கேட்கும் மனபாங்கு துளியளவும் இருக்காது அப்படிப்பட்ட குணம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மேஷம்

இந்த ராசியில் பிறந்தவர்கள் செய்த தவறை ஒத்துக்கவே மாட்டாங்க... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Never Apologize Their Mistakesமேஷ ராசியினர் செவ்வாயை ராசி நாதநாக கொண்டவர்கள் என்பதால் இயல்பிலேயே அதிக தற்பெருமை மற்றும் பிடிவாத குணம் கொண்டர்களாக இருப்பார்கள். 

இவர்கள் செய்த தவறை யாராலும் ஒத்துக்க வைக்கவோ மன்னிப்பு கேட்க வைக்கவே முடியாது.இவர்களிடம் உறவு வைத்துக்கொள்வது சில சமயங்களில் மன உழைச்சலை ஏற்படுத்தும். 

அவர்கள் தங்கள் தவறுகளை நியாயப்படுத்த பழியை மற்றவர்கள் மீது திசைத்திருப்ப என்னவேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பார்கள். 

ரிஷபம்

இந்த ராசியில் பிறந்தவர்கள் செய்த தவறை ஒத்துக்கவே மாட்டாங்க... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Never Apologize Their Mistakes

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள்.இவர்கள் எப்போதும் உயர்பதவில் மற்றவர்களால் எளிதில் நெருங்க முடியாத இடத்தில் தான் இருப்பார்கள்.

பிடிவாத குணத்துக்கு பெயர் பெற்ற இவர்கள் தங்களின் தவறுகளுக்காக யாரிடமும் மன்னிப்பு கேட்ட கூடிய நிலையில் இருக்க மாட்டார்கள்.

அதற்கான வாய்ப்புகளையும் பெரும்பாலும் அமைத்துக்கொள்ள மாட்டார்கள். இதுவே இவர்களிடமிருந்து நல்ல உறவுகளை் பிரிந்து செல்லவும் காரணமாக அமைந்துவிடும். 

சிம்மம்

இந்த ராசியில் பிறந்தவர்கள் செய்த தவறை ஒத்துக்கவே மாட்டாங்க... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Never Apologize Their Mistakes

சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம ராசியினர் பெருமிதமும், அகங்காரமும் நிறைந்தவர்களாக இருப்பார்கள். 

இவர்கள் மற்றவர்களை அடக்கும் குணத்துடன் இயல்பிலேயே பிறந்திருப்பதால், இவர்கள் யாரிடமும் அடங்கி போவது சற்று கடினமான விடயமாக இருக்கும். 

இந்த குணம் காரணமாக தாங்கள் பக்கம் தவறு இருக்கின்றபோதிலும் அதற்காக மனம் வருந்த மாட்டார்கள். ஒருபோதும் செய்த தவறை பொறுப்பேற்கவும் தயாராக இருக்கமாட்டார்கள்