மட்டக்குளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

காய்ச்சல் காரணமாக அவர் நாரஹென்பிட்டி பொலிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அப்போது அவருக்கு, ​​பி.சி.ஆர் பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.