திருமணத்திற்கு பிறகு ஒருவர் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்து, குடும்ப வாழ்க்கைக்குள் செல்கிறார்கள். சிலரது திருமண வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் வரும். இதனால் அவர்கள் பிரிந்து கூட வாழலாம்.

இப்படியான ஏற்றத்தாழ்வுகளை சகித்துக் கொண்டு வாழும் பொழுது நிச்சயம் ஒருநாள் நமது வாழ்க்கை நமக்கு பிடித்தது போல் மாறும். சண்டை, சச்சரவுகள் ஏற்படும் நேரத்த்தில் தம்பதிகள் எப்படி பிரியலாம் என்றே அதிகமாக சிந்திக்கின்றனர். ஆனால் குடும்ப வாழ்க்கை என வரும் பொழுது தனிப்பட்ட வாழ்க்கையில் பார்க்க, முற்றிலும் வேறுப்பட்டவையாக இருக்கும்.

அதனை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அடிக்கடி கணவன்-மனைவிக்குள் சண்டை வந்தால் குழந்தைகளின் மனநிலை மோசமாகி விடும். சில சமயங்களில் எந்தவித காரணமும் இல்லாமல் சண்டை வரும். அப்படியான வீடுகளில் வாஸ்து குறைபாடு தான் காரணம்.

வாஸ்து சாஸ்திரத்தில் சில விதிகள் கொடுக்கப்பட்டுள்ளன அவற்றை பின்பற்றி வந்தால் மட்டும் போதும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

கணவன்- மனைவி சண்டை தீரணுமா? அப்போ இந்த 3 வாஸ்து டிப்ஸ் செய்து பாருங்க | How To Reduce Fights At Home Vastu

அப்படியாயின், திருமண வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் வகையில் உள்ள வாஸ்து குறிப்புகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

1. கணவன் மனைவிக்கு இடையே சண்டை சச்சரவுகள் அதிகமாக இருந்தால் அதற்கு கல் உப்பு பரிகாரம் செய்யலாம். வாஸ்து படி, கல் உப்பை சின்ன சின்ன பாக்கெட்டுகளில் போட்டு அதை வீட்டில் எல்லா மூலைகளிலும் வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வீட்டிலுள்ள எதிர்மறையான சக்திகள் வெளியேறி, வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி நிலவும்.

கணவன்- மனைவி சண்டை தீரணுமா? அப்போ இந்த 3 வாஸ்து டிப்ஸ் செய்து பாருங்க | How To Reduce Fights At Home Vastu

2. வாஸ்து படி, வீட்டில் கடவுள் சிலையை வைப்பது மிகவும் பயன் தரும். கடவுள் சிலைகள் வைக்கும் பொழுது மனதில் மகிழ்ச்சி உண்டாகும். கடவுள் சிலையை நேருக்கு நேர் பார்க்கும்படி வைக்காமல் பூஜை அறையில் வைக்கலாம். கடவுளின் சிலை எப்போதும் வீட்டின் முன்புறம் நோக்கி வைத்திருக்க வேண்டும். இப்படி செய்து வந்தால் வீட்டில் நேர்மறையான ஆற்றல்கள் அதிகமாக பரவும்.

கணவன்- மனைவி சண்டை தீரணுமா? அப்போ இந்த 3 வாஸ்து டிப்ஸ் செய்து பாருங்க | How To Reduce Fights At Home Vastu3. வீட்டின் பிரதான கதவை எப்போதுமே சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வாஸ்துப்படி, முன் வழியாக தான் நேர்மறை ஆற்றல் மற்றும் எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழையும். எப்போதும் பிரதான கதவு சுத்தமாக இல்லாவிட்டால் எதிர்மறையான ஆற்றல்கள் அதிகமாக பரவும். இது தவிர வீட்டின் வடகிழக்கு மூலையை சுத்தமாக வைப்பது ரொம்பவே முக்கியம்.  

கணவன்- மனைவி சண்டை தீரணுமா? அப்போ இந்த 3 வாஸ்து டிப்ஸ் செய்து பாருங்க | How To Reduce Fights At Home Vastu