தற்போது சருமத்தின் அழகிற்காக பலரும் பல விதத்தில் பணத்தை செலவு செய்கின்றனர்.

சூரிய ஒளி சருமத்தில் படும்போது அதனால் சருமம் பல விளைவுகளை சந்திக்கிறது.

இதனால் சருமம் அதன் உண்மையான நிறத்தை இழக்கிறது. நம்மை சுற்றியுள்ள இயற்கையான பொருட்களை கொண்டு நமது சருமத்தை அழகுபடுத்த முடியும். அந்த வகையில் சருமம் சிவப்பழகு பெற பீட்ரூட் முக்கிய பங்கு வகிக்கிறது.

பீட்ரூட் சருமத்திற்கு இயற்கையான பொலிவைத் தரும் என ஆய்வுகளால் அறியப்பட்டுள்ளது.

இதில் நீரேற்றம் அதிகம் உள்ளதால் இது சருமத்தை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்கும்.

இந்த பீட்ரூட்டை எப்படி சருமத்தின் சிவப்பழகிற்காக பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கொரியர்களின் கண்ணாடி சருமம் வேண்டுமா? இதை ஒரு முறை பூசினால் போதும் | Glass Skin Beetroot Int Daily Skincare Routineமுகத்தில் அதிகமான பருக்கள் இருந்தால் பீட்ரூட் பொடியை பயன்படுத்தலாம். இதை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து போட்டால் முகம் 15 நாட்களில் பளபளப்பாக மாறும்.

இந்த பேஸ்டை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். பீட்ரூட் முகத்தில் உள்ள அதிகப்படியான அழுக்குகளை வெளியேற்றி, பருக்களை குறைக்கிறது. 

கொரியர்களின் கண்ணாடி சருமம் வேண்டுமா? இதை ஒரு முறை பூசினால் போதும் | Glass Skin Beetroot Int Daily Skincare Routineதற்போதைய பெண்கள் கண்ணாடி சருமத்தை தேடி செல்கின்றனர். கண்ணாடி சருமம் என்பது கொரியர்களின் கால நிலைக்கு ஏற்றவாறு இருக்கிறது. அது ஆசியப்பெண்களுக்கு வருவது கடினம். ஆனால் கண்ணாடி போன்ற மிகவும் சுத்தமான பொலிவான சருமத்தை பெற முடியும்.

கொரியர்கள் போல இல்லாமல் சுத்தமான சருமத்தை பெற  பீட்ரூட் பொடியை எடுத்து அரிசி மாவுடன் கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி கழுவ வேண்டும். இந்த கலவையில் வைட்டமின் சி நிரம்பி இருப்பதால் இது முகத்தில் இயற்கை பொலிவை கொடுக்கிறது. கண்ணாடி போலவும் சருமம் காணப்படும்.

கொரியர்களின் கண்ணாடி சருமம் வேண்டுமா? இதை ஒரு முறை பூசினால் போதும் | Glass Skin Beetroot Int Daily Skincare Routine