குழந்தைகள் என்றால் எப்போதும் அழகாக தான் இருப்பார்கள். பெண் குழந்தைகள் முதல் ஆண் குழந்தைகள் வரையுள்ளவர்களுக்கு பெரும்பாலான தாய்மார்கள் குழந்தைகளுக்கு அழகுசாதனப்பொருட்களை உபயோகிக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக குழந்தைகளின் கண்களை அழகாக மெருகூட்டுவதற்கு மஸ்காரா போன்ற அழகு சாதன பொருட்களை பயன்படுத்துகிறார்கள்.இதை செய்யும் போது குழந்தை அழகாக தான் இருக்கும் ஆனால் இது ஆரோக்கியமானதா இல்லையா என்பது தாய்மார்களுக்கு தெரியாது.

குழந்தைகளின் கண்களுக்கு மஸ்காராவை பயன்படுத்துவது நன்மையான விஷயமா இல்லையா என்பது பற்றி நிபுணர்கள் பரிந்துரைக்கின்றார்கள்.இதை ஒரு சிலர் தீங்கற்ற அழகு நடைமுறையாகக் கருதுகிறார்கள்.இதை பற்றிய தகவலை இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.

குழந்தைகளின் கண்களுக்கு மஸ்காராவைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதா? | Babys Eyes Apply To What Do Medical Effect Sayகுழந்தையின் கண்களைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானது அத்துடன் அவை உணர்திறன் கொண்டது. மஸ்காராவில் குறிப்பாக இரசாயனங்கள் மற்றும் செயற்கை நிறமிகள் கொண்டிருக்கின்றன.

குழந்தைகளின் கண்களுக்கு மஸ்காராவைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதா? | Babys Eyes Apply To What Do Medical Effect Sayஇது குழந்தைகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். பாதுகாப்புகள் மற்றும் வாசனை திரவியங்கள் போன்ற பல கண் இமை மயிர்களுக்கு ஊட்டப்படும் ஒரு வகை சாய கலவையில் உள்ள பொருட்கள் ஒவ்வாமை எதிர்வினைகளைத் தூண்டும்.

இதனால் கண்கள் சிவத்தல், அரிப்பு மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். 

பார்வை மீதான தாக்கம்

மஸ்காராவை தொடர்ந்து பயன்படுத்துவது குழந்தையின் கண் ஆரோக்கியத்தில் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தலாம். அரிதாக இருந்தாலும், மஸ்காரா துகள்கள் கண்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டால் அசௌகரியம் அல்லது சேதத்தை ஏற்படுத்தலாம்.

தொடர்ச்சியான எரிச்சல் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களின் வெளிப்பாடு ஆகியவை காலப்போக்கில் குழந்தையின் பார்வையை பாதிக்கலாம். பல மஸ்காராக்களில் இளம் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இல்லாத இரசாயனங்கள் உள்ளன.

பாராபென்ஸ், பித்தலேட்டுகள் மற்றும் செயற்கை சாயங்கள் போன்ற பொருட்கள் உணர்திறன் வாய்ந்த சருமத்தில் கடுமையாக இருக்கும். அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ், சாத்தியமான நச்சுத்தன்மை அல்லது பாதகமான எதிர்விளைவுகளைத் தடுக்க அத்தகைய தயாரிப்புகளைத் தவிர்க்க அறிவுறுத்துகிறது.