புதன் கிரகமானது சிம்ம ராசியில் நுழைவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
நவக்கிரகங்களில் புதன் பகவான் இளவரசன் என்று அழைக்கப்படும், இந்த கிரகமானது சுபநிலையில் இருக்கும் போது, அந்த நபருக்கு சுப பலன்கள் கிடைக்கும்.
ஜோதிடத்தில் புதன் பகவானுக்கு தனி இடம் உண்டு. புதன் புத்திசாலித்தனம், தர்க்கம், உரையாடல், கணிதம் மற்றும் நட்பு ஆகியவற்றின் காரணியாக இருக்கிறார்.
வரும் செப்டம்பர் 4ம் தேதி, புதன் பகவான் கடக ராசியிலிருந்து சிம்ம ராசியில் நுழைகின்றார். இதனால் எந்தெந்த ராசியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
கடகம்
கடக ராசியில் புதன் 2வது வீட்டிற்கு செல்ல உள்ளதால், சற்று மோசமானதாக இருப்பதுடன், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல் கஷ்டப்படும் நிலை ஏற்படும்.
வியாபரத்தில் இருக்கும் போட்டி காரணமாக லாபம் பெற முடியாமல் சிரமம் ஏற்படும். பணியிடத்தில் நிதி விடயங்களில் அலட்சியமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
விருச்சிகம்
புதன் விருச்சிக ராசியின் 10வது வீட்டில் நுழைவதால், பண பரிவர்த்தனையில் அதிக கவனமாக இருக்க வேண்டும். பலரும் உங்களை ஏமாற்ற நேரிடலாம். பணியிடத்தில் பதற்றம் நிறைந்த சூழல் காணப்படும்.
தொழிலதிபர்களுக்கு நஷ்டம் ஏற்படவும், மாணவர்கள் படிப்பில் நாட்டம் இல்லாமலும் இருப்பார்கள். பரம்பரை சொத்து பிரச்சனையால் உறவில் விரிசல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
மீனம்
மீன ராசியினைப் பொறுத்தவரையில் புதுன் 6வது வீட்டிற்கு செல்ல உள்ளதால், நிதி ரீதியாக மோசமான நிலை ஏற்படுவதுடன், புதிய முதலீட்டையும் தவிர்ப்பது நல்லது.
பெரிய செலவுகளை கட்டுக்குள் வைக்கவும். வேலையில் நாட்டம் இல்லாமல் இருக்கும் நிலை ஏற்படுவதால், இலக்குகளை அடைய முடியாமல் அவதிப்பட நேரிடும். குடும்ப வாழ்க்கையிலும் சில பிரச்சனைகள் ஏற்படலாம்.