அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் ‘EEE’ எனப்படும் கொசுவினால் உண்டாகும் ஒரு தொற்று நோய் வேகமாக பரவி வருகின்றது. இது பரவும் விதம் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

‘ஈஸ்டர்ன் ஈக்வைன் என்செபாலிடிஸ் அல்லது ‘ட்ரிபிள் ஈ’ (Eastern Equine Encephalitis - EEE) என்று அழைக்கப்படும் இந்த வைரஸ் கொசு கடிப்பதால் மனிதனுக்கு வருகின்றது. இது தற்பொது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் பலரின் உயிர் காவு வாங்ப்படுகின்றது.‘ட்ரிபிள் ஈ’ வைரஸ், கொசுக் கடி மூலம், முக்கியமாகப் பறவைகள், குதிரைகள், மற்றும் மனிதர்களுக்குப் பரவும் ஒரு வைரஸ் ஆகும்.இந்த வைரஸ் அரிதானது என்றாலும், இது மிகவும் கொடுமையானது.

அமெரிக்காவை உலுக்கும் ‘EEE’ வைரஸ் தொற்று: எவ்வாறு பரவும்? | America Eee Virus Infection Symptoms In Tamil

இந்த வைரஸ் முதன்முதலில் 1938 இல் மாசசூசெட்ஸில் குதிரைகளில் அடையாளம் காணப்பட்டது. இந்த வைரஸ் பொதுவாக கடின மர சதுப்பு நிலங்களில் அமைந்துள்ள பறவைகளில் பரவுகிறது.

மனிதர்கள் மற்றும் பாலூட்டிகள் இரண்டையும் கடிக்கும் கொசு இனங்கள் பாதிக்கப்பட்ட பறவையையும் பின்னர் ஒரு பாலூட்டியையும் கடித்து அதன் இரத்த ஓட்டத்தில் வைரஸை செலுத்தும் போது வைரஸை பரப்புகிறது.

திடீரென காய்ச்சல் மற்றும் சளி தலைவலி வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு வலிப்பு மற்றும் நடத்தை மாற்றங்கள் மயக்கம் மற்றும் திசைதிருப்பல் கடுமையான சந்தர்ப்பங்களில், மூளை வீக்கம் போன்றவை உடலில் ஏற்பட்டால் இது இந்த நோய்க்கான அறிகுறியாகும்.

இதை முதுகெலும்பு திரவம் அல்லது இரத்தத்தை பரிசோதிப்பதன் மூலமும் EEE கண்டறியப்படுகிறது. இதனால் வைரஸ் அல்லது வைரஸ் ஆன்டிபாடிகள் உள்ளதா என்பதைக் காண்பிக்கும். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால் அது மூளையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அமெரிக்காவை உலுக்கும் ‘EEE’ வைரஸ் தொற்று: எவ்வாறு பரவும்? | America Eee Virus Infection Symptoms In Tamil

இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு 30% இறப்பு விகிதத்தின் காரணமாக இது ஒரு தீவிர நோயாக கருதுகின்றனர். உயிர் பிழைத்தாலும், பாதிக்கப்பட்டவர்களில் பலர் நீண்டகால நரம்பியல் பிரச்சனைகளை அனுபவிக்கின்றனர்.

இதன் காரணமாக இந்த வைரஸ் தொற்று ஏற்பட்ட அறிகுறி தெரிந்தால் இதற்கென இருக்கும் சிகிச்சைகளை முறையாக பெற்றுக்கொள்ள வேண்டும்.