யூடியூப் சேனலில் பணம் சம்பாதிப்பது மற்றும் பார்ட்னர் ப்ரோக்ராமர் திட்டத்தில் சேர்வதற்கான வழிகாட்டுதலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்று பெரும்பாலான நபர்களின் வருமானத்திற்கு முக்கிய காரணமாக யூடியூப் இருந்து வருகின்றது.
அதாவது தான் போடும் காணொளிகள் மக்கள் மத்தியில் நன்றாக ரீச் ஆகிவிட்டால் வருமானமும் நமக்கு வர ஆரம்பித்துவிடும்.
அவ்வாறு வருமானம் வருவதற்கு நாம் செய்ய வேண்டிய சில காரியங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
யூடியூப் சேனல் தாடங்குவதற்கு எந்தவொரு முதலீடும் தேவையில்லை. இணைய இணைப்பு (Internet Connection) மற்றும் ஒரு கூகுள் கணக்கும்(மின்னஞ்சல்) மட்டும் இருந்தால் போதும்.
யூடியூப்பை பொறுத்தவரையில் திறமை மட்டுமே இதன் முதலீடு ஆகும். அதாவது மக்களை தான் வெளியிடும் காணொளியினை எவ்வாறு பார்க்க வைப்பது என்பது தான் நாம் செய்ய வேண்டியது.
பலதரப்பட்ட மக்களும் தனது திறமையை இதன்மூலம் வெளிக்காட்டி வரும் நிலையில், கையில் ஒரு மொபைல் மட்டும் இருந்தாலே போதுமாம்.
இதற்கு உங்களது கையில் ஆன்ட்ராய்டு மொபைல் இருந்தாலே போதும். அட்டகாசமான முறையில் இதில் பணம் சம்பாதிக்கலாம்.
விளம்பரங்கள், சேனல் மெம்பர்ஷிப்கள், சூப்பர் சாட் மற்றும் விற்பனைப் பொருள்கள் மூலம் பணம் சம்பாதிக்க யூடியூப் கிரியேட்டர்களை அனுமதிக்கிறது.
இந்த அம்சங்களைப் பெற, நீங்கள் யூடியூப் பார்ட்னர் ப்ரோக்ராமர் (YPP) திட்டத்தில் சேர வேண்டும். இதற்கு உங்களது தகுதி என்னவென்று பூர்த்தி செய்ய வேண்டுமாம்.
அதாவது யூடியூப்பின் அனைத்து பாலிசி மற்றும் கைட்லைன்ஸ் இவற்றினை கடைபிடிப்பதுடன், சமூக வழிகாட்டுதல், சேவை விதிமுறைகள், பதிப்புரிமை சட்டங்களும் இதில் அடங்கும்.
மேலும் நீங்கள் வசிக்கும் இடத்தில் யூடியூப் பார்ட்னர் ப்ரோக்ராமர் திட்டம் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளவும்.
மேலும் கடந்த 12 மாதங்களுக்கு எந்தவொரு சம்பளம் ்வராது. அதாவது உங்கள் பதிவேற்றம் செய்திருக்கும் பதிவுகள் 4000 மணி நேரத்திற்கு பொதுமக்கள் பார்த்திருக்க வேண்டும். இதனை Watch Hours என்று கூறுவர்.
மேலும் குறைந்தது 1000 Subscriber வைத்திருக்க வேண்டும். பணம் பெறுவதற்கு உங்கள் யூடியூப் சேனலுடன் AdSense கணக்கை இணைத்திருக்க வேண்டும்.