இந்து மதத்தின் படி கணபதி ஞானம், கல்வி மற்றும் செழிப்பு ஆகியவற்றின் கடவுளாக பார்க்கப்படுகிறார்.

இவர் வாழ்க்கையில் வந்தால் தடையில்லாமல் இவை அனைத்தும் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகிறார்கள். இவற்றை பெற சரியான சமயமாக விநாயகரின் பிறந்த நாள் பார்க்கப்படுகிறது. இதுவே விநாயக சதுர்த்தி கணேஷோத்ஸவ் என அழைக்கப்படுகின்றது.

இந்த நாளில் விநாயகப் பெருமானை வழிபடுவதால் துக்கங்கள் போகும், மகிழ்ச்சி உண்டாகும், வாழ்க்கையில் உள்ள பிணக்குகள் நீங்கும், செல்வம் மற்றும் வெற்றி கைக்கு வந்து சேரும் என கூறப்படுகிறது.

அந்த வகையில், ஜோதிடத்தில் 12 ராசிகள் உள்ளன. இந்த 12 ராசிகளில் சிலருக்கு விநாயகப் பெருமானின் சிறப்பு அருள் உண்டு. அத்தகைய ராசியினர் யார் யார் ? என்று தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

விநாயகருக்கு ரொம்ப பிடித்த ராசியினர் யார் தெரியுமா? இதுல உங்க ராசி இருக்கா பாருங்க | Ganesh Chaturthi Ganesha Favorite Zodiac Signs

 1. மிதுனம்

  • ஜோதிட சாஸ்திரப்படி விநாயகர் மிதுன ராசியினரிடம் அதிகமாக அன்பு வைத்திருக்கிறார். இதனால் அந்த ராசியில் பிறந்தவர்கள் புத்திசாலியாக இருப்பார்கள்.
  • கல்வியில் பல சாதனைகளை புரிவார்கள்.
  • படிப்பதிலும் எழுதுவதிலும் மிக வேகமானவர்களாக இருப்பார்கள்.
  • எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு வரும் ஆற்றல்கள் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு விநாயகர் கொடுப்பார்.
  • கனிவான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
  • தினமும் விநாயகரை வழிபட வேண்டும். 

விநாயகருக்கு ரொம்ப பிடித்த ராசியினர் யார் தெரியுமா? இதுல உங்க ராசி இருக்கா பாருங்க | Ganesh Chaturthi Ganesha Favorite Zodiac Signs

2. மகரம்

  • ஜோதிட சாஸ்திரப்படி, மகர ராசியில் பிறந்தவர்கள் விநாயகர் அருள் கொண்டவர்களாக இருப்பார்கள். இதற்கு அடையாளமாக கடின உழைப்பாளியாக இருப்பார்கள்.
  • இந்த ராசியில் பிறந்தவர்களை கண்மூடித்தனமாக நம்பலாம்.
  • மிக விரைவான மனம் கொண்டவர்கள்.
  • மகர ராசிக்காரர்கள் கல்வித் துறையில் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
  • தினமும் விநாயகரை தியானிக்க வேண்டும். 

விநாயகர் சதுர்த்தி 2024 எப்போது?

விநாயகருக்கு ரொம்ப பிடித்த ராசியினர் யார் தெரியுமா? இதுல உங்க ராசி இருக்கா பாருங்க | Ganesh Chaturthi Ganesha Favorite Zodiac Signs

கிரிகோரியன் நாட்காட்டியின் படி விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் வரும்.

மாறாக 2024 ஆம் ஆண்டில், விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 6 ஆம் தேதி, மதியம் 03:01 மணிக்குத் தொடங்கி செப்டம்பர் 17 ஆம் தேதி செவ்வாய்கிழமை மாலை 05:37 மணிக்கு முடிவடைகிறது.

கணேஷ் விசர்ஜன் 2024 செப்டம்பர் 17 செவ்வாய்க்கிழமை திட்டமிடப்பட்டுள்ளது.

மத்தியான விநாயகர் பூஜை முஹுரத் , மிகவும் சாதகமான காலம், காலை 11:03 மணிக்கு தொடங்கி மதியம் 01:34 வரை 2 மணி நேரம் 31 நிமிடங்கள் வரை நீடிக்கும்.

விநாயக சதுர்த்தி அன்று சந்திரனை பார்ப்பது தோஷம்.