பொதுவாகவே கருப்பு நிறத்தில் ஆடை அணிவது வீட்டில் கருப்பு நிறத்திலாக தளபாடங்கள் மற்றும் பொருட்களை அதிகமாக வைத்திருப்பது பலக்கும் பிடித்த விடயமாக இருக்கின்றது.

ஆனால் கலாசார மற்றும் இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் கருப்பு நிறம் அசுபமாக கருதப்படுகின்றது. இதற்கு என்ன காரணம்? கருப்பு நிறத்தை பயன்பதுத்துவதால் ஏற்படும் பாதக விளைவுகள் என்னென்ன என்பது குறித்து முழுமையைாக இந்த பதிவில் பார்க்கலாம்.

கருப்பு நிறம் தீமையின் அறிகுறியாக பார்க்கப்படுவது ஏன்னு தெரியுமா? | Why Does The Color Black Represent Evilசாஸ்திரங்களின் அடிப்படையில் கறுப்பு நிறம் தீமையின் அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. காரணம் இந்த நிறத்திற்கு எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் சக்தி அதிகமாக இருக்கின்றது. கருப்பு நிறத்திலான பொருட்கள் அதிகமாக இருக்கும் இடங்களை தீய சக்திகள் சூழ்ந்துக்கொள்ளும் என்பது நம்பிக்கை. 

கருப்பு நிறம் தீமையின் அறிகுறியாக பார்க்கப்படுவது ஏன்னு தெரியுமா? | Why Does The Color Black Represent Evil

அதுமட்டுமன்றி இந்து மதத்தின் பிரகாரம் கருப்பு நிறம் சனி பகவானின் அடையாளமாக கருதப்படுகின்றது.கருப்பு நிறத்தில் ஆடை அணியும் போது சனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் இதனால் துன்பங்களையும் பிரச்சினைகளையும் அதிகமாக சந்திக்க வேண்டி ஏற்படலாம். 

மேலும் கிரக நிலைகள் சரியில்லாத போது கருப்பு நிறத்தை அதிகம் பயன்படுத்துவது சனிபகவானின் கோப பார்வையால் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பையும் அதிகரிக்கின்றது. 

கருப்பு நிறம் தீமையின் அறிகுறியாக பார்க்கப்படுவது ஏன்னு தெரியுமா? | Why Does The Color Black Represent Evil

கருப்பு நிறம் காளி தேவியை அடையாளப்படுத்துவதாகவும் அமைகின்றது சாஸ்திர நம்பிக்கைகளின் அடிப்படையில் காளியின் தாக்கத்தால் அமாவாசை இரவு இருள் சூழ்ந்துவிடும் என்பது ஐதீகம். அதனால் கருப்பு நிறத்தை பயன்படுத்துவதால் வாழ்வில் இருள் சூழ்ந்துக்கொள்ளும் எனவும் நம்பப்படுகின்றது. 

கருப்பு நிறம் தீமையின் அறிகுறியாக பார்க்கப்படுவது ஏன்னு தெரியுமா? | Why Does The Color Black Represent Evil

இதனாலேயே கருப்பு நிறம் தீமையின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது.  நல்ல நாட்களில் கருப்பு நிற ஆடை அணிவதால் எதிர்மறை ஆற்றல் அதிகரித்து சுப நிகழ்வுகளில் பாதக விளைவுகள் ஏற்பட கூடும் என்பதற்காக தான் சுப நிகழ்வுகளில் கருப்பு நிற ஆடை அணிவது அமங்களமாக முன்னோர்கள் கருதினர்.