எந்த நாட்களில் எந்தெந்த கடவுளை வணங்க வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக இந்து மக்கள் பல தெய்வங்களை வழிபடுகின்றனர். ஒவ்வொரு தெய்வத்திற்கும் சில பூஜை சடங்குகளையும் செய்து வருகின்றனர்.
குறிப்பிட்டத தெய்வங்களுக்கு குறிப்பிட்ட தினத்தில் பூஜை செய்து வணங்கினால் அதிர்ஷ்டம் என்று கூறப்படுகின்றது.
திங்கள்:
திங்கள் கிழமையானது சிவனுக்கு உகந்த நாள் ஆகும். இந்நாளில் சிவனை நினைத்து வழிபட்டால், வாழ்க்கையில் நிம்மதி, நீண்ட ஆயுள், ஆரோக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகின்றது.
மேலும் சிவனுக்கு பால் அபிஷேகம் செய்வதும் நல்லதாம். சிவனுக்கு வெள்ளை நிறம் பிடிக்கும் என்பதால் வெள்ளை நிற ஆடை அணிந்து வழிபடுவது சிறந்தது.
செவ்வாய்:
செவ்வாய்கிழமையானது அனுமனுக்கு உகந்த நாள் என்பதால், அன்றைய தினம் வழிபட்டால் அனைத்து தடங்களும் நீங்கி மன அமைதியை கொடுப்பாராம். சிவப்பு மற்றும் ஆரஞ்சி நிற பூக்களுடன் விளக்கேற்றி அனுமனை வழிபட்டால் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும்.
புதன்:
பல பெயர்களை வைத்திருக்கும் பிள்ளையாருக்கு உகந்த நாள் புதன் ஆகும். இந்நாளில் பிள்ளையாரை வழிபட்டால் அனைத்து தடங்களும் விலகுவதுடன், கற்றல் திறனும் மேம்படும்.
மஞ்சள், வாழைப்பழம், பச்சை புல், இனிப்புகள் வழங்கி விநாயகரை வழிபட்டால் அதிர்ஷ்டம் கிடைக்கும். பச்சை மற்றும் மஞ்சள் விநாயகருக்கு உகந்த நிறம் என்பதால் இந்த நிறத்தில் ஆடையணிந்து விநாயகரை வழிபடலாம்.
வியாழன்:
விஷ்ணு பகவானுக்கு உகந்த நாளான வியாழக்கிழமையில் வழிபட்டால் திருமண யோகம் கூடுவதுடன், வீட்டில் சண்டை சச்சரவுகளும் நீங்கி வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்குமாம்.
நெய், பால், மஞ்சள் நிற பூக்கள், வெல்லம் இவற்றை வைத்து விஷ்ணு பகவானை வணங்கினால் அதிர்ஷ்டம் கைகூடும். விஷ்ணு பகவானுக்கு உகந்த நிறம் மஞ்சள் என்பதால் மஞ்சள் நிற ஆடையணிந்து வழிபட வேண்டும்.
வெள்ளி:
வெள்ளிக்கிழமை மகாலட்சுமி மற்றும் அம்மனுக்கு உகந்த நாள் ஆகும். இன்றைய தினம் விரதம் இருந்து வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம், செல்வம், மன நிம்மதி, ஆரோக்கியம் கிடைக்கும்.
வெல்லம், பூக்கள், பால், பழங்கள் இவரை வைத்து வழிபட்டு வந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும். இந்நாளில் வெள்ளை மற்றும் கலர்புல் ஆடைகள் அனைத்து நல்லது.
சனி:
பெருமாள் மற்றும் சனி பகவானுக்கு உகந்த நாளான சனிக்கிழமையில் விரதம் இருந்து வழிபட்டால் அதிர்ஷ்டம் கிடைப்பதுடன், செல்வம், ஆரோக்கியம் இவையும் கிடைக்கும். இந்நாளில் கருப்பு நிறம் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
ஞாயிறு:
சூரிய பகவானுக்கு உகந்த நாளாக ஞாயிறு இருக்கின்றது. இந்நாளில் சூரிய பகவானை வழிபட்டால் ஆரோக்கியம் பெருகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சூரியனுக்கு உகந்த நிறம் சிவப்பு என்பதால், சிவப்பு நிற ஆடையணிந்து வழிபட வேண்டும்.