ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலையில் ஏற்படுகின்ற ராசி மாற்றமாக இருந்தாலும் சரி நட்சத்திர மாற்றமாக இருந்தாலும் சரி அது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்து மதத்தின் சம்பிரதாயங்களின் அடிப்படையில் கிரகங்களின் அதிபதியாக விளங்கும் சூரிய பகவானின் பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

சிம்ம ராசியில் நுழையும் சூரியன்: நாளை முதல் இந்த ராசியினருக்கு ஜாக்பாட் தான்... உங்க ராசி என்ன? | Sun Entering Leo Which Zodiac Signs Get More Luck

அந்தவகையில் ஒரு வருடத்திற்குப் பின்னர் சூரிய பகவான் நாளை ஆகஸ்ட் 16 ஆம் திகதி சிம்ம ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகின்றார். எதிர்வரும் செப்டம்பர் 16 ஆம் திகதி வரை சிம்மத்தில் சஞ்சரித்து பின்னர்  கன்னி ராசியில் நுழைவார். 

குறித்த  சூரிய பெயர்ச்சி சங்கராந்தி என அழைக்கப்படுகின்றது. சூரிய பகவானின் இந்த இடமாற்றம் அனைத்து ராசியிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை வாரி கொடுக்கப்போகின்றது அப்படி ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில்  பார்க்கலாம். 

சிம்மம்

சிம்ம ராசியில் நுழையும் சூரியன்: நாளை முதல் இந்த ராசியினருக்கு ஜாக்பாட் தான்... உங்க ராசி என்ன? | Sun Entering Leo Which Zodiac Signs Get More Luck

சூரியன் சிம்ம ராசிக்கு இடமாற்றம் அடைவதால் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் முழுவதுமே அமோகமாக இருக்கும்.  தொழில் ரீதியில் எதிர்ப்பார்த்த பலன்கள் கிடைக்கும்.

பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நிதி ரீதியில் இந்த மாதம் அற்புததமாக அமையும். பல்வேறு வழிகளிலும் வருமானம் அதிகரிக்கக்கூடியதாக இருக்கும். புதிய தொழிலை தொடங்க நினைப்பவர்களுக்கு இது சிறப்பான நேரமாக இருக்கும். 

துலாம்

சிம்ம ராசியில் நுழையும் சூரியன்: நாளை முதல் இந்த ராசியினருக்கு ஜாக்பாட் தான்... உங்க ராசி என்ன? | Sun Entering Leo Which Zodiac Signs Get More Luck

சூரியனின் பெயர்ச்சி துலா ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த  பலன்களை கொடுக்கும். புதிய வியாபாரம் வழியாக வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.குடும்ப உறுப்பினர்களுக்கு மத்தியில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். எதிர்பாரத வகையில் பணவரவு அதிகரிக்கும். மொத்தத்தில் இந்த மாதம் நீண்ட நாள் நிலுவையில் இருந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் வெற்றிகரமான தீர்வு கிட்டும். 

விருச்சிகம்

சிம்ம ராசியில் நுழையும் சூரியன்: நாளை முதல் இந்த ராசியினருக்கு ஜாக்பாட் தான்... உங்க ராசி என்ன? | Sun Entering Leo Which Zodiac Signs Get More Luck

சூரியனின் பெயர்ச்சி விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு பல்வேறு வகையிலும் நல்ல செய்திகளை கொண்டு வந்து சேர்க்கும்.பணத்துக்கு பஞ்சமே இருக்காது. வருமானம் பெறக்கூடிய சகல வழிகளிலும் பணத்தை முதலீடு செய்வீர்கள். தொழில் ரீதியில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.