பஸ்ஸர பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் சிலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் தொற்றாளர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பஸ்ஸர பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பஸ்ஸர கனவரெல்லை பிரதேசத்தை சேர்ந்த நபரொவருக்கு கொவிட் 19 தொற்று நேற்றைய தினம் (23) உறுதிப்படுத்தப்பட்டது.

அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பஸ்ஸர பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்திருந்த காரணத்தால் 5 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.