பொதுவாகவே ஆண்களானாலும் சரி பெண்களானாலும் சரி தங்களை அழகாக வெளிக்காட்டிக்கொள்ளவே அனைவரும் ஆசைப்படுவார்கள்.

என்றும் இளமையான தோற்றத்தில் முகத்தை பளப்பளப்பாக வைத்துக்கொள்ள யாருக்கு தான் பிடிக்காமல் போகும்? அதிலும் குறிப்பாக பெண்களுக்கு முகத்தை அழகுப்படுத்திக்கொள்வதில் அலாதி இன்பம் இருக்கும். 

உங்க முகம் தங்கம் போல் ஜொலிக்கணுமா? நெய்யை இப்படி use பண்ணுங்க | What Happens If We Massage Ghee On Faceஇதற்காக நேரத்தையும் பணத்தையும் வாரி இறைப்பவர்கள் ஏறாளம்.முகத்தை ஜொலிக்க வைக்க வேண்டும் என்பதற்கான சந்தைகளில் கிடைக்கும் ரசாயனம் கலந்த அழகுசாதன பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் மிகவும் அபாயகரமானதாக இருக்ககின்றது.

எந்தவிதமான பக்கவிளைவுகளும் இன்றி இயற்கை முறையில் முகத்தை பளபளப்பாக்குவதற்கு நெய் பெரிதும் துணைப்புதிகின்றது. நெய்யை வைத்து முகத்தை எவ்வாறு ஜொலிக்க வைப்பது என இந்த பதிவில் பார்கலாம்.

உங்க முகம் தங்கம் போல் ஜொலிக்கணுமா? நெய்யை இப்படி use பண்ணுங்க | What Happens If We Massage Ghee On Faceநெய்யில் வைட்டமின், ஃபேட்டி ஆசிட் ஆகியன செரிவாக காணப்படுவதால் இது ஒரு இயற்கை மாய்ஸ்சரைசராக விளங்குகின்றது.  மேலும் உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து  சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை பாதுகாப்பதன் மூலம் சருமத்தை என்றும் இளமையாக வைத்துக்கொள்வதில் நெய் பெரும் பங்காற்றுகின்றது. 

உங்க முகம் தங்கம் போல் ஜொலிக்கணுமா? நெய்யை இப்படி use பண்ணுங்க | What Happens If We Massage Ghee On Faceசருமத்தை பளபளப்பாகவும், பிரகாசமாகவும், இளமையாகவும் வைத்துக்கொள்ள நெய் மசாஜ் பெரிதும் துணைப்புதரிகின்றது. உயர் தரமான, இயற்கை முறையில் கிடைக்கும் நெய்யை பயன்படுத்தி முகத்தை நன்றாக மசாஜ் செய்வது விரைவில்  சிறந்த பலனை கொடுக்கின்றது. 

முதலில் சருமத்தில் உள்ள மேக்அப் மற்றும் அழுக்குகளை முறையாக சுத்தம் செய்து முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி சுத்தம் செய்துக்கொள்ள வேண்டும். 

உங்க முகம் தங்கம் போல் ஜொலிக்கணுமா? நெய்யை இப்படி use பண்ணுங்க | What Happens If We Massage Ghee On Faceபின்னர் சிறிய அளவு நெய்யை ஒரு கிண்ணத்தில் போட்டு மிதமாக சூடுபடுத்தி எடுத்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து முகம் தங்கக்கூடிய பதத்தில் சூடான நெய்யை கையில் எடுத்து உங்கள் முகத்தில் மென்மையாக வட்ட வடிவில் தடவிக்கொள்ள வேண்டும். 

முகத்தில் கோடுகள், தழும்புகள் இருக்கும் இடங்களில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து முழுமையாக தடவ வேண்டும்.

உங்க முகம் தங்கம் போல் ஜொலிக்கணுமா? நெய்யை இப்படி use பண்ணுங்க | What Happens If We Massage Ghee On Faceபின்னர்  முகத்தில் சுருக்கங்கள் அதிகமுள்ள இடங்களிலும்  கண்களைச் சுற்றிலும் வாய்ப் பகுதிகளிலும் மென்மையாக வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும்.

முகத்தை முழுமையாக  மசாஜ் செய்த பின்னர் , உங்கள் கழுத்து, தோள், கைகள், மார்பகம், வயிறு, முதுகு, கால்கள் ஆகியஅனைத்து பகுகளிலும் அதே போல் மிதமான சூட்டில் நெய்யை தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். 

நன்றாக  மசாஜ் செய்த பின்னர் நெய் நன்றாக உடலுக்குள் ஊடுருவம் வரையில் 20 தொடக்கம் 30 நிமிடங்கள் வரையில் உலரவிட வேண்டும்.

இறுதியில் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவினால் சருமம் உடனடியாக பளபளப்பதை கண்கூடாக அவதானிக்க முடியும். நெய் மசாஜ் செய்துவிட்டு இரவு முழுவதும் அப்படியே விடுவதால் சருமத்துக்கு மேலும் பொலிவு கிடைக்கும்.

இதனை தொடர்ச்சியாக செய்வதன் மூலம் சருமத்தில் கொலாஜன் உற்பத்தி இயற்கையாகவே அதிகரித்து சருமம் என்றும் இளமை பொலிவுடன் இருக்கும்.