உக்ரேனிய தலைநகர் கெய்வில்  அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதாக மீட்புப் படையினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தனர்.

ஒன்பது மாடி கட்டிடத்தின் நான்கு தளங்கள் உடைந்துள்ளதாகவும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று மாநில அவசர சேவை அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

21 குடியிருப்பாளர்கள் கட்டிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள போதும் எத்தனை பேர் உள்ளே இருந்தார்கள் என்பது உகுறித்து தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இருப்பினும் தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் தொடர்ந்தும் மீட்புப்பணியில் ஈடுபட்டுவருவதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன