ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில்,  மனதின் காரகனாகக் கருதப்படுபவர் சந்திரன். இவர் ஒரு ராசியில் சுமார் 2½ நாட்கள் மட்டுமே இருப்பதால், அடிக்கடி ராசியை மாற்றி, மற்ற கிரகங்களுடன் இணைந்து சுப, அசுப யோகங்களை உருவாக்கி 12 ராசிகளின் வாழ்ககையிலும் தாக்கத்தை ஏற்படுத்துவார்.

அந்த வகையில், ஆகஸ்ட் 11ஆம் தேதி சந்திரன் கடக ராசிக்குள் நுழைகிறார். ஏற்கனவே கடகத்தில் குரு பகவான் பயணித்து வருவதால், சந்திரன்–குரு சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது.

அத்துடன் சூரியன் மற்றும் புதனும் கடகத்தில் இருப்பதால் சதுர்கிரக யோகம், புதாதித்ய ராஜயோகம், ஹன்ஸ் ராஜயோகம் உள்ளிட்ட பல சுபயோகங்களும் உருவாகின்றன.

குறிப்பாக இந்த கஜகேசரி ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும், இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கவுள்ளதாக கணிக்ப்பட்டுள்ளது. அப்படி அதிகளவில் சாதக பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கடகம்

ஆகஸ்ட் 11ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: தொழில் நிலையில் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! | Jupiter Moon Creates Gajkesari Rajyog Who Get Luck

கடக ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டம் பல வகையிலும் சாதகமானதாக அமையப் போகிறது. கடக ராசியின் முதல் வீட்டில் குரு மற்றும் சந்திரன் இணைவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது.

இந்த யோகம் உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதுடன், வாழ்க்கையில் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும். பல நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்திகள் ஒன்றன்பின் ஒன்றாக கிடைக்க வாய்ப்புள்ளது.

குறிப்பாக பணிபுரிபவர்களுக்கு இந்தக் காலம் மிகவும் சிறப்பாக அமையும். அலுவலகத்தில் உங்கள் திறமை மற்றும் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கலாம். வருமானத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதோடு, பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

கன்னி

ஆகஸ்ட் 11ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: தொழில் நிலையில் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! | Jupiter Moon Creates Gajkesari Rajyog Who Get Luck

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்தக் காலம் மிகவும் மங்களகரமானதாக அமையப் போகிறது. கன்னி ராசியின் 11-வது வீட்டில் குரு-சந்திர சேர்க்கை ஏற்படுவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது.

இதன் மூலம் பொருளாதாரம், தொழில் மற்றும் சமூக வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம். குறிப்பாக நிதி நிலைமை வழக்கத்தைவிட சிறப்பாக இருக்கும்.

நீண்ட காலமாக சிக்கித் தவித்த பணம் எதிர்பாராத நேரத்தில் கைக்கு வந்து சேரும் வாய்ப்பு உள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறைந்து, மனதில் நிம்மதி ஏற்படும்.வியாபாரிகளுக்கும் இந்தக் காலம் லாபகரமானதாக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கும் இந்தக் காலகட்டம் மிகவும் சிறப்பான பலன்களை வழங்கக்கூடியதாக உள்ளது. மீன ராசியின் 5-வது வீட்டில் குரு மற்றும் சந்திரன் இணைவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது.

இதன் காரணமாக அதிர்ஷ்டத்தின் ஆதரவு பல்வேறு விஷயங்களில் கிடைக்கக்கூடும். குறிப்பாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான சூழல் உருவாகும்.

ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கும் வேலையில் மாற்றம், புதிய பொறுப்பு அல்லது எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படலாம். உங்கள் திறமை வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். நிதி நிலையிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.