சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று முன்தினம் நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டு வந்தநிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை தான் என போலீசார் உறுதிப்படுத்தினர். இதையடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியது யார் என்ற கோணத்தில் போலீசார் அடுத்தகட்ட விசாரணையை நடத்தி வந்தனர். இந்நிலையில், நடிகை சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர் மற்றும் தாய் தரப்பில் கொடுக்கப்பட்ட மன அழுத்தமே முக்கிய காரணம் என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேம்நாத்தை பிரிந்து வருமாறு சித்ராவின் தாய் விஜயா தொடர்ந்து கூறி வந்ததால் சித்ராவிற்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சித்ராவின் கணவர் ஹேம்நாத் குடித்துவிட்டு, படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அவரிடம் சண்டையிட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சித்ரா, ஹேம்நாத், சித்ராவின் தாயார் விஜயா சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்றும் அவரை விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அதேபோல் சித்ராவின் தாயாரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
சித்ரா தற்கொலைக்கு யார் காரணம்? - காவல்துறை வெளியிட்ட திடுக்கிடும் தகவல்
- Master Admin
- 11 December 2020
- (1350)
தொடர்புடைய செய்திகள்
- 01 October 2026
- (109)
அக்டோபர் வந்தாலே ஆட்டம் ஆரம்பம்... அடுத்...
- 03 May 2023
- (1744)
நடிகர் - இயக்குனர் மனோபாலா காலமானார்.. த...
- 17 September 2026
- (122)
ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் விஜய் சேதுபதிய...
யாழ் ஓசை செய்திகள்
கொழும்பு port city யில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் கொலை
- 10 October 2026
அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு!
- 09 October 2026
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : பிரதமரின் அறிவிப்பு
- 09 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
