“ நான் சில குறும்படங்கள் இயக்கியதும் அவரை எப்படியாவது சந்தித்துவிட நினைத்தேன். ஆனா அவரைத் தொடர்புகொள்ள முடியலை. அப்புறம் சில மாதங்கள் கழித்து திடீர்னு போன். ‘ரமணன் உங்கள் குறும்படங்களைப் பார்த்தேன். எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு. நாம் இணைந்து படம் செய்யலாமா’ன்னு கேட்கிறார். எனக்கு ஆச்சர்யம் தாங்கலை. த்ரில்லர்னா சில ரூல்ஸ் வெச்சிருக்கோம்ல, அதை உடைக்கணும் போல இருந்தது.

எதார்த்தத்துக்குப் பக்கத்தில் கதை சொல்ல முடியும்னு தோணுச்சு. பாபி சிம்ஹா என்ற நல்ல நடிகரே படத்தைத் தயாரிக்க முன்வந்ததும் முக்கியமான விஷயம். இது 90 சதவிகிதம் மழையில் எடுக்கப்பட்ட ஒரு படம்!”என்று கூறி ஆச்சர்யப்படுத்துகிறார். இந்தப் படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் காஷ்மீரா பர்தேசி.. உண்மையாகவே காஷ்மீரிப் பெண்!