ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலையில் ஏற்படும் மாற்றங்கள் 12 ராசிகளிலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும்.அந்த வயைில் சூரிய பனவான் கிரகங்களின் அதிபதியாக விளங்குகின்றார்.
சாஸ்திரப்படி ஆகஸ்ட் 2 ஆம் திகதி சூரியன் சனியின் நட்சத்திரத்தில் இருந்து விலகி புதனின் நட்சத்திரத்திற்கு இடமாற்றம் அடைகின்றார். குறித்த சூரிய கோச்சார் எனும் நிகழ்வு மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.
இதன் தாக்கம் 12 ராசிகளிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட 3 ராசியினருக்கு மாபெரும் அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகின்றது. அப்படி சாதக பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
சூரியனின் இந்த மாற்றம் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு வாழ்வில் பல்வேறு வகையிலும் சாதக மாற்றங்களை கொடுக்கப்போகின்றது.
ஆன்மீக விடயங்களில் இயல்பாகவே ஆர்வம் அதிகமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.தொழில் ரீதியில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற நன்மைகள் கிடைக்க வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு இந்த சூரியன் மாற்றம் பெரும் அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகின்றது. தொழில் மற்றும் வியாபார ரீதியில் சிறந்த முன்னேற்றம் கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.
நிதி நிலை சீராக இருக்கும் எதிர்பாராத வகையில் பணம் வரும் வாய்ப்பு காணப்படுகின்றது. மேலும் அதிக பயணங்களை மேற்கொள்ள வேண்டி ஏற்படலாம். இதுவும் சாதக பலன்களையே கொடுக்கும்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரியன் மாற்றத்தால், வியாபாரத்தில் அதிக லாபம் ஈட்டும் வாய்ப்பு காணப்படுகின்றது. இவர்களை பொருத்தவரையில் இது பொற்காலம் என்றே கூற வேண்டும். நிதி நிலையில் உச்சத்தை தொடப்போகின்றீர்கள்.