பொதுவாக உடலில் காணப்படும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் பிரதான தொழிலை சிறுநீரகம் செய்கின்றது.

நாம் உண்ணும் உணவிலும் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளிலும் உள்ள நச்சுப்பொருள்களும் சிறுநீர் மூலமாகவே உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றது.

சிறுநீரகங்கள் சரியாக இயங்காத பட்சத்தில், உடலில் மற்ற உறுப்புக்களுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சில மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம். இவ்வாறு நிறுநீரகம் பாதிக்கப்படும் போது உடலில் முன்கூட்டியே சில அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும்.இவ்வாறான அறிகுறிகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

கைகள் மற்றும் கால்களில் வீக்கம்

காலையில் எழுந்ததும் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சிறுநீரக பாதிப்பு உறுதி | Symptoms In The Morning Sign Of Kidney Damageகாலை எழுந்தவுடன் கைகள் மற்றும் கால்களில் வீக்கத்தை உணர்வது சிறுநீரக பிரச்சனைகளின் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. இந்த அறிகுறி இருந்தால் அதனை ஒருபோதும் அலட்சியமாக கருதக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

நுரையுடன் சிறுநீர்

காலையில் எழுந்ததும் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சிறுநீரக பாதிப்பு உறுதி | Symptoms In The Morning Sign Of Kidney Damageகாலையில் எழுந்தவுடன் சிறுநீர் கழிக்கும் போது சிறுநீர் நுரையுடன் வெளியேறினால், சிறுசீரக பாதிப்பு இருப்பதன் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.சிறுநீரகங்களால் சரியாக வேலை செய்ய முடியாத நிலையில் புரோட்டீன் மற்றும் பிற ரசாயனங்களை  சிறுநீரகத்தால் சரியாக வடிகட்ட முடியாத நிலை ஏற்படும். இந்த அறிகுறியை அவதானித்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். 

வாந்தி

காலையில் எழுந்ததும் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சிறுநீரக பாதிப்பு உறுதி | Symptoms In The Morning Sign Of Kidney Damageகாலையில் எழுந்ததும் காரணமின்றி வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகள் இருந்தால் இது சிறுநீரகம் பாதிப்பில் இருப்பதையே உணர்த்துகின்றது. இப்படியான அறிகுறிகளை சந்தித்ததால் சிறுநீரக பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம். 

காலையில் தசைப்பிடிப்பு

காலையில் எழுந்ததும் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சிறுநீரக பாதிப்பு உறுதி | Symptoms In The Morning Sign Of Kidney Damageகாலையில் எழுந்தவுடன் தசைப்பிடிப்பு, தசை வலி போன்ற பிரச்சினைகள் இருப்பது சிறுநீரக பிரச்சினைகளின் முக்கிய அறிகுறியாகும்.  காலையிலேயே தசைப்பிடிப்பு பிரச்சினையால் அவதிப்படுபவர்களின் சிறுநீரகம் பெரிய பாதிப்பில் உள்ளது என அர்த்தம். இந்த அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்கவே கூடாது. 

மிகுந்த உடல் சோர்வு

காலையில் எழுந்ததும் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சிறுநீரக பாதிப்பு உறுதி | Symptoms In The Morning Sign Of Kidney Damageஇரவு சரியான நேரத்திற்கு படுக்கைக்கு சென்று சிறந்த தூக்கத்தை அனுபவித்த பின்னரும் காலையில் சோர்வாக இருந்தால் சிறுநீரக பாதிப்பு இருப்பதாக அர்த்தம். உடல் சோர்வு பல்வேறு உடல் ஆரோக்கிய பிரச்சினைகளின் முக்கிய அறிகுறியாக இருப்பதால் இதனை ஒருபோதும் அலட்சியப்படுத்த கூடாது.