பொதுவாக கற்றாழை சருமம், உடல் ஆரோக்கியத்தில் பெரிதும் பங்கு வகிக்கிறது.
இதனால் கற்றாழையை அனைவரும் வீடுகளில் வளர்க்கின்றனர்.
கற்றாழையின் பயன்பாடு முகத்திற்கு பளபளப்பைத் தருவதுடன் வாஸ்து ரீதியாக பல்வேறு நன்மைகளை தருவதாக கூறப்படுகின்றது.
சாஸ்திரத்தின் படி, கற்றாழை செடியை வீட்டில் நட்டால், அது அந்த நபரின் அதிர்ஷ்டத்தை அதிகப்படுத்தும் எனப்படுகின்றது.
அந்த வகையில் கற்றாழை செடியை தவறான இடத்தில் நட்டு வைத்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும்? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. வாஸ்து படி, வீட்டில் கற்றாழை செடி வைத்தால் நேர்மறை ஆற்றல் பரவும். இது தவறான திசையில் வைக்கும் பொழுது வீட்டில் கஷ்டம் வரும்.
2. மறந்தும் கற்றாழை செடியை வீட்டின் கிழக்கு திசையில் நடக்கூடாது. வீட்டிற்கு நேர்மறை ஆற்றல் கிழக்கு திசையில் இருந்து நுழை போது கற்றாழை செடி அங்கிருந்தால் எதிர்மறை ஆற்றல் பரவ ஆரம்பித்து விடும்.
3. காலையில் எழுந்தவுடன் நல்ல விஷயங்களைப் பார்க்க வேண்டும் என பலரும் கூறுவார்கள். ஆனால் காலையில் கற்றாழை செடியை பார்ப்பது நல்லதல்ல. இதனால் உங்களின் வழக்கமான செயல்பாடுகள் கெட்டுபோவதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
4. படுக்கையறையில் ஒரு முள் செடி இருப்பது குடும்ப வாழ்க்கை எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
5. தவறான இடத்தில் கற்றாழை செடி வைப்பதால் குடும்பத்தின் வளர்ச்சியை பாதித்து வீட்டில் வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தி விடும்.