சமீபத்தில் 2வது மனைவியாக திருமணம் செய்து கொண்ட தெலுங்கு நடிகை பற்றிய பேச்சுத்தான் ராமோஜி ராவ் சிட்டி முழுக்கவே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்த அந்த நடிகை அரசியல் பிரபலம் ஒருவரை திருமணம் செய்துக் கொண்டதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.
சினிமாவில் சீனியர் நடிகையாக மாறி ஓரங்கட்டப்பட்ட நிலையில், இதற்கு மேல் ஹீரோயின் சான்ஸ் எல்லாம் கிடைக்காது என நினைத்த நடிகை பல கோடி சொத்துகளுடன் அரசியல் பிரபலம் ஒருவர் திருமணம் செய்துக் கொள்ள அவசரம் காட்டிய நிலையில், ஓகே சொல்லி கழுத்தை நீட்டி விட்டார் என்கின்றனர்.
சுமார் 1500 கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரராக அந்த அரசியல் பிரபலம் இருப்பதால் தான் 2வது மனைவியாக திருமணம் செய்துக் கொள்ளவும் நடிகை எந்தவொரு யோசனையும் செய்யாமல் சம்மதித்து விட்டார் என்கின்றனர்.
இதில், இன்னொரு கூத்து என்னவென்றால் திருமணத்துக்கு முன்பு வரை நடிகர் ஒருவரை அந்த நடிகை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த நடிகருக்கு படங்கள் சரியாக ஓடாத நிலையில், ஏகப்பட்ட கடன்களும் இருப்பதால் இவன் எல்லாம் நமக்கு செட் ஆகமாட்டான் என நினைத்த நடிகை நைஸாக காதலனை கழட்டி விட்டதாக ஷாக் கொடுக்கின்றனர்.
அந்த அரசியல் பிரபலத்துக்கு 1500 கோடி சொத்துக்கள் இருப்பதால் தானாக வந்த அதிர்ஷ்டத்தை வேண்டாம் என ஏன் சொல்ல வேண்டும் என நடிகை தான் வேண்டும் என பைத்தியம் பிடித்தது போல சுற்றிய அரசியல் பிரபலத்தை காதலிக்கத் தொடங்கி கோலாகலமாக திருமணத்தையும் அந்த நடிகை செய்து விட்டதாக ஆந்திராவை சேர்ந்த பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.
சினிமாவை விட்டு விட்டு சீக்கிரமே அரசியலில் அந்த நடிகை களமிறங்கப் போகிறாராம். அதனால், தான் அரசியல் பிரபலத்தை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்றும் கூறுகின்றனர். ஒரு கல்லில் ரெண்டு மாங்காய் என்பது இதுதானா? என டோலிவுட்டில் பரவலான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஆனால், அந்த அரசியல் பிரபலம் என்ன பிளானுடன் இந்த நடிகையை திருமணம் செய்திருக்கிறார் என்பது தான் தெரியவில்லை என்றும் அவரிடமும் ஏதோ பக்கா பிளான் இருக்கிறது என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.