நாம் அழகு என்று சொல்லும் போது அதற்கு முதலில் முக்கியத்துவம் கொடுப்பது முகத்திற்கு தான். பொதுவாக எல்லா நடிகைகளும் தனக்கு அழகு என்று பார்க்கும் போது அவர்களின் கை, கால், முகம் என உடல் முழுவதம் ஒரே நிறத்திலும் ஒரே பொலிவிலும் இருக்கும்.

இதனால் தான் அவர்கள் அனைவராலும் ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால் நாம் அழகு என்று வரும் போது நம் கால்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

இதன் காரணமாக சூரிய ஒளியில் இருந்து வந்ததன் பின்னர் கால்கள் நாம் அணிந்திருக்கும் பாதணிகளுக்கு ஏற்றதை போல கருமையடையும்.

காலில் அடர் கருமையை நீக்க வேண்டுமா? தேங்காய் எண்ணெயுடன் இதை கலந்தால் போதும் | Dark Spots On Legs Removel Mix Coconut Oil Beautyஇதை அப்படியே விடுவது நல்லதல்ல கால்களை வெண்மையாக்க நாம் வீட்டு வைத்தியத்தை பயன்படுத்தலாம். இதற்கு  தேங்காய் எண்ணை மட்டும் போதுமானது. இதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

  • எலுமிச்சை சாறு- 3 ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய்- 1/2 ஸ்பூன்
  • பேக்கிங் சோடா- 1 டீஸ்பூன்

முதலில் ஒரு சுத்தமான கிண்ணத்தை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து பின்னர் இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

காலில் அடர் கருமையை நீக்க வேண்டுமா? தேங்காய் எண்ணெயுடன் இதை கலந்தால் போதும் | Dark Spots On Legs Removel Mix Coconut Oil Beautyஇப்போது உங்களுக்கு ஒரு நல்ல கலவை கிடைக்கும். இதன் பின்னர் நமது காலை அழுக்கு இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு காட்டன் துணியை பயன்படுத்தி காலை நன்றாக தண்ணீர் இல்லாமல் துடைக்க வேண்டும்.

இதன் பின்னர் ஏற்கனவே தயார்படுத்திய கலவையை எடுத்து அதை ஒரு சிறிய காட்டன் துணி அல்லது ஸ்பூன் பயன்படுத்தி காலில் கருமை உள்ள இடங்களில் அப்ளை செய்து தேய்த்து விட வேண்டும்.

காலில் அடர் கருமையை நீக்க வேண்டுமா? தேங்காய் எண்ணெயுடன் இதை கலந்தால் போதும் | Dark Spots On Legs Removel Mix Coconut Oil Beauty

காலில் நன்றாக அப்ளை செய்த பிறகு, 4 அல்லது 5 நிடங்கள் உலர விட்டு தண்ணீர் கொண்டு கழுவி விடுங்கள்.

இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்தி வருவதன் மூலம் காலில் உள்ள கருமையை எளிதில் நீக்கிவிடலாம்.  இது ஆரோக்கியத்திற்கம் பாதிப்பு தராது.