நாம் இந்த பூமியை பார்ப்பதற்கு காரணமாக இருந்தவர்கள் நமது பொற்றோர்கள் தான். எனவே நாம் கடவுளுக்கு கொடுக்கும் மதிப்புபையும் மரியாதையையும் நிச்சயம் பெற்றோருக்கும் கொடுக்க வேண்டும்.

ஆனால் தற்காலத்தில் பெற்றோர்களை யாரும் கண்டுகொள்ளாத நிலையே காணப்படுகின்றது. வயதான பெரும்பாலான பெற்றோர்கள் பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் ஒருவேளை உணவுக்காக வாரிசுகளின் காலடியில் பரிதாபமாக கிடக்க வேண்டிய கட்டாயத்தில்  இருக்கின்றனர். 

இந்த அறிகுறிகள் இருக்கா? உங்களுக்கு பித்ரு தோஷம் இருக்குன்னு அர்த்தம்! | How To Know If One Has Pitra Dosha

இவ்வாறு அவர்கள் மனதாலும் உடலாலும் வேதனைப்பட்டு இறக்கும் பட்சத்தில் இது பித்துரு தோஷம் ஏற்படுவதற்கு காரணமாக அமையும். இது ஒருவருடைய பரம்பரையையே பாதிக்கும் தன்மை கொண்டது. 

சாஸ்திரங்களின் அடிப்படையில் ஒருவருக்கு முன்னோர்களின் ஆசிர்வாதம் இருக்கும் பட்சத்தில் வாழ்வில் வெற்றிகளை எளிமையாக அடைய முடியும் என நம்பப்படுகின்றது.

இந்த அறிகுறிகள் இருக்கா? உங்களுக்கு பித்ரு தோஷம் இருக்குன்னு அர்த்தம்! | How To Know If One Has Pitra Dosha

இதுவே ஒருவருக்கு முன்னோர்களின் ஆசி இல்லையென்றால் அவர் வாழ்க்கை முழுவது பல்வேறு துன்பங்களுக்கும் பணப்பிரச்சினைகளுக்கும் தள்ளப்படும் நிலை ஏற்படும். இதுவே பித்ரு தோஷம் என கூறப்படுகின்றது. 

ஒருவருக்கு பித்ரு தோஷம் இருப்பதை சில அறிகுறிகளை வைத்து துள்ளியமாக கணித்துவிட முடியும்.இது தொடர்வில் தெளிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம். 

இந்த அறிகுறிகள் இருக்கா? உங்களுக்கு பித்ரு தோஷம் இருக்குன்னு அர்த்தம்! | How To Know If One Has Pitra Dosha

வாழ்வில் எதிர்பாராத விதமாக பெரியளவு பணத்தை இழக்க நேரிடுவது பித்ரு தோஷத்தின் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. மேலும் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் பணத்தை சேமிக்கவே முடியாத நிலை இருக்கும். இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் முன்னோர்கள் உங்கள் வம்சத்தின் மீது கோபத்தில் இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்து உரிய பரிகாரங்களை செய்ய வேண்டியது அவசியம். 

உணவில் முடி

இந்த அறிகுறிகள் இருக்கா? உங்களுக்கு பித்ரு தோஷம் இருக்குன்னு அர்த்தம்! | How To Know If One Has Pitra Dosha

நீங்கள் சாப்பிடும்  உணவில் அடிக்கடி முடி தென்படுவதும் முன்னோர்களின் ஆத்மா மகிழ்ச்சியாக இல்லை எப்பதையே குறிக்கின்றது. இந்த சாஸ்திரங்களின் அடிப்படையில்  முன்னோர்கள் பசியோடு இருப்பதன் வெளிப்பாடாகவே இரு பார்க்கப்படுகின்றது. இந்த அறிகுறி தென்படும் பட்சத்தில் பித்ரு தோஷத்தை நீக்கும் பரிகாரங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். 

கனவில் முன்னோர்கள்

இந்த அறிகுறிகள் இருக்கா? உங்களுக்கு பித்ரு தோஷம் இருக்குன்னு அர்த்தம்! | How To Know If One Has Pitra Dosha

உங்களின் கனவில் முன்னோர்கள் சிரிப்பதை போல் அல்லது  மகிழ்ச்சியாக பேசுவதைப்போல் காண்பது முன்னோர்களின் ஆசி உங்களுக்கு முழுமையாக கிடைத்துள்ளதை குறிக்கின்றது.  ஆனால் அவர்கள் கனவில் அழுதாலோ, மன வருத்தம் அடைந்து பேசினாலோ அவர்கள் மிகவும் கோபத்தில் இருக்கின்றார்கள் என்று அர்த்தம். அவர்களின் ஆத்மாவை சாந்தப்படுத்தும் பரிகாரங்களை செய்யாத பட்சத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும். 

விசித்திரமான வாசனை

இந்த அறிகுறிகள் இருக்கா? உங்களுக்கு பித்ரு தோஷம் இருக்குன்னு அர்த்தம்! | How To Know If One Has Pitra Dosha

பொதுவாக ஒவ்வொரு இடத்திலும் தனித்துவமான வாசனை இருப்பதை அனைவரும் உணர்ந்திருப்போம். ஆனால் வீட்டில் விதித்திரமான மணங்களை உணர்ந்தால் பித்ருக்கள் வருத்தத்தில் இருக்கின்றார்கள் என்று அர்த்தம். இந்த வாசனையை அடிக்கடி உணர்ந்தால் உடனடியாக அதற்கு முறையான பரிகாரத்தை செய்துவிட வேண்டும். 

வேலையில் தடைகள்

இந்த அறிகுறிகள் இருக்கா? உங்களுக்கு பித்ரு தோஷம் இருக்குன்னு அர்த்தம்! | How To Know If One Has Pitra Dosha

எந்த காரியத்தில் இறங்கினாலும் பவ்வேறு தடைகளையும் பிரச்சினைகளையும் சந்திக்கின்றீர்கள் என்றால் அதற்கும் பித்ருக்கள் தோஷமே காரணம். பித்ரு பூஜை செய்வதன் மூலம் முன்னோர்களின் கோபத்தில் இருந்தும் தோஷத்தில் இருந்தும் விடுப்பட முடியும். இதனை அலட்சியமாக எடுத்துக்கொண்டால் வாழ்க்கை முழுவதும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும். இது உங்களின் பிள்ளைகளையும் கூட பாதிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.