ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, தொழில் வாழ்க்கை,திருமண வாழ்க்கை, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் ஆதிக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் கடினமான சூழ்நிலைகளையும் தங்களின் சரியான முடிவுகள் மற்றும் நிதானமான அனுகுமுறை மூலம் அசால்ட்டாக கடந்துவிடும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

அப்படி சிக்கல்கள், பிரச்சினைகளுக்கு சரியான முறையில் தீர்வு காணும் ஆளுமை கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் தங்களின் ரகசியம் காக்கும் தன்மைக்கும், மர்மமாக குணத்துக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
மாற்றத்தின் கிரகமான புளூட்டோவால் ஆளப்படும் இவர்கள் மற்றவர்கள் கவனிக்காததை பார்க்கும்,தனித்துவ ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
கடினமான சூழ்நிலைகளிலும் நிதானமாகவும், தெளிவான திட்டத்துடனும் இருப்பதால், இவர்கள் எவ்வளவு பெரிய பிரச்சினையையும் எளிதில் தீர்த்துவிடுவார்கள்.
மகரம்

மகர ராசிக்காரர்கள் தங்கள் ஒழுக்கம், பொறுமை மற்றும் மன உறுதிக்கு பெயர் பெற்றவர்களாகவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் கில்லாடிகளாகவும் இருப்பார்கள்.
பொறுப்பின் கிரகமான சனிபகவானால் ஆளப்படுவதால், இவர்கள் தங்களுக்கு எவ்வளவு பெரிய சிக்கல் வந்தாலும், அதனை சமாளித்து கடமைகளை நிறைவேற்ற பாடுப்படுவார்கள்.
இவர்கள் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தங்களின் அனுபவம் மற்றும் அறிவாற்றலையே நம்பியிருக்கிறார்கள். பிரச்சினைகளின் போது பதற்றமடையாமல் இருப்பதே இவர்களின் மிகப்பெரிய பலமாக இருக்கும்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் தங்களின் தனிப்பட்ட விடயங்களை யாருடனும் பகிர்ந்துக்கொள்ள விரும்பாதவர்களாகவும், இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.
புதனால் ஆளப்படுவதால், அவர்கள் தகவல்களைச் சேகரிப்பதிலும் ஒரு பிரச்சினைகளை சிறப்பான முறையில் தீர்த்து வைப்பதிலும் கில்லாடிகள். மற்றவர்கள் சிந்திக்காத கோணத்தில் சிந்திக்கும் ஆளுமையே இவர்களின் மிகப்பெரும் பலம்.
அவர்களின் தகவமைப்புத் திறனும், மன வலிமையும் சவால்களுக்கு விரைவாகப் பதிலளிக்கவும் பல தீர்வுகளைக் கண்டறியவும் அவர்களுக்கு துணைப்புரியும்.
