ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபி மற்றும் அதன் சுற்றுலா மையமான டுபாயில் இரண்டு தனித்தனி வெடிப்பு சம்பவம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது.

இந்த வெடிப்பு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று பொலிஸார் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

தலைநகரில் நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக அபுதாபி அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

அபுதாபி சம்பவத்தில் பல சிறிய அளவிலான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கட்டிடம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை டுபாயில், இன்று அதிகாலை உணவகத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டுபாயில் நடந்த குண்டுவெடிப்பில் கட்டிடத்தின் தரை தளம் சேதமடைந்தது என்பதோடு தீ 33 நிமிடங்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.